Published:Updated:

சிக்னலை மறைத்து பேனர்! அ.தி.மு.க-வுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள்

'மக்களின் தாகம் தீர்க்க  தண்ணீர்ப் பந்தல் அமைத்திடுங்கள்' என்று கோடைக்காலங்களில் கட்சித் தலைவர்கள் சொல்வதும், தொண்டர்கள் அதை நிறைவேற்றுவதும் இயல்புதான். 'தலைமையின் உத்தரவுக்கிணங்க தண்ணீர்ப் பந்தல் வைக்கிறோம்' என்று, அதை 'கட்-அவுட்'கள், பேனர்கள் மூலம், தொண்டர்கள் தம்பட்டம் அடிப்பதும் நடக்கும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கடந்த வாரம், 'ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல் வைத்து, மக்களின் தாகம் தீர்த்திடுங்கள்' என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினர்.

கட்சித்  தலைமை சொன்னதை, சென்னை அயன்புரம் அ.தி.மு.க வட்டச் செயலாளர் வேலு எப்படி நிறைவேற்றியுள்ளார் என்பதை இந்த பேனர் வழியாகப் பாருங்கள். சென்னை  ஐ.சி.எஃப் பிரதான சாலை, அயன்புரம் பஸ்டெப்போ, ஓட்டேரி, கீழ்ப்பாக்கம் கார்டன் செல்லும் நான்கு வழிச் சாலைகளை  இணைக்கும் அயன்புரம் சிக்னல் பாய்ன்ட்டில்தான்  இந்த  பேனர்  அமைந்திருக்கிறது. அயன்புரம் ஆண்டர்சன் சாலை சந்திப்பில், 'போக்குவரத்து சிக்னலை' மறைத்து, கட்- அவுட் (பேனர்) வைக்கப்பட்டிருக்கிறது. "தண்ணீர்ப் பந்தல் வைத்து, பொதுமக்களின் தாகம் தீர்ப்பது இருக்கட்டும், இதுபோன்ற 'சிக்னல்' பாய்ன்ட்டுகளில் அவசர ஆம்புலன்ஸ்களையும் கொண்டுவந்து நிறுத்துங்கள்" என்கின்றனர் பொதுமக்கள்.