Published:Updated:

ராமநாதபுரம் எம்.பி., அன்வர் ராஜாவின் மகன்மீது காரைக்குடியில் வழக்குப் பதிவு!

ராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி., அன்வர் ராஜாவின் மகன், நாசர் அலி. இவர், சென்னையில் ரேடியோ ஜாக்கியாகப் பணிபுரியும் ரோபினாவைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, 3 ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்ததாகப் புகார் எழுந்தது.

நாசர் அலி தன்னை ஏமாற்றிவிட்டு, வேறு பெண்ணைத் திருமணம் செய்ய இருக்கிறார் என்று கூறி, காரைக்குடி டி.எஸ்.பி கார்த்திகேயனிடம் கடந்த 2 நாள்களுக்கு முன்பு புகார் கொடுத்தார்,ரோபினா. அடுத்த நாள் காலை, காரைக்குடி காலேஜ் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் தனக்கு நீதி வழங்க வேண்டும் என்று முறையிட்டார். 'மனசாட்சி இல்லாமல் திருமணம் நடக்காது, நாங்கள் திருமணத்தை நடத்திவைக்க மாட்டோம்’ என்று மீடியா முன்னிலையில் ஜமாத் நிர்வாகம் அந்தப் பெண்ணுக்கு வாக்குறுதி வழங்கியது.

பனைக்குளம் ஜமாத்தில் இருந்து, அன்வர் ராஜா  தன் மகனின் திருமணத்துக்காக  தடையில்லாச் சான்ரை காரைக்குடி காலேஜ் ஜமாத்தாரிடம் ஒப்படைக்க காரில் வந்தபோது, பத்திரிகையாளர்களைப் பார்த்ததும் காரை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டார். அதன்பிறகு, அரியகுடியில் உள்ள தனியார் ஹோட்டலில் திருமணம் நடப்பதாகத் தகவல் கிடைத்ததும், அந்த இடத்திற்கு ரோபினா சென்றார். அங்கே சென்றதும், அ.தி.மு.க. நிர்வாகிகள் கேட்டை இழுத்து மூடியதும், சுவர் ஏறிக் குதித்துச் சென்று, திருமணம் நடக்கும் இடத்திற்கு முன்பு சென்றதும் போலீஸ் அவரை தடுத்து நிறுத்தியது. போலீஸார் தடுத்ததும், தனக்கு நீதி வேண்டும் என ரோபினா கேட்டார். அங்கிருந்தவர்கள் ஆபாசமாகப் பேசினார்கள். அதன்பிறகு, போலீஸ் சமாதானப்படுத்தி அனுப்பியது. நீதிமன்றத்தில் வழக்குப் போடுவேன். வீதிக்கு இழுக்காமல் விட மாட்டேன் என்று சபதமிட்டவாறே சென்றார். இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.பி அன்வர்ராஜாவின் மகன் நாசர் அலி மீது, ரோபினா கொடுத்த புகாரின் பேரில், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில், பெண் வன்கொடுமை உள்ளிட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.