Published:Updated:

கல்லணை கட்டிய கரிகாலனுக்கு மணிமண்டபம்: ஜெ. அறிவிப்பு

கல்லணை கட்டிய கரிகாலனுக்கு மணிமண்டபம்: ஜெ. அறிவிப்பு
கல்லணை கட்டிய கரிகாலனுக்கு மணிமண்டபம்: ஜெ. அறிவிப்பு

கல்லணை கட்டிய கரிகாலனுக்கு மணிமண்டபம்: ஜெ. அறிவிப்பு

தேனி: கல்லணை கட்டிய கரிகாலனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் கர்னல் ஜான் பென்னி குயிக் நினைவு மணிமண்டபம் திறப்பு விழா, திருவள்ளுவர் திருநாள்  மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,"முல்லைப் பெரியாறு அணையைவிட மிகவும் பழமை வாய்ந்த அணை கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள கல்லணை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் சோழனால் கட்டப்பட்டு இன்றளவும் கோடானு கோடி மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கும் இந்த அணை ஒரு பொறியியல் அற்புதம் ஆகும். 

##~~##
இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் கல்லணையே மிகவும் பழமை வாய்ந்தது. இப்படிப்பட்ட உறுதியான அணையை உருவாக்கிக் கொடுத்த கரிகால் சோழனின் சேவையை நினைவு கூர்ந்து போற்றும் வகையிலும்; கௌரவிக்கும் வகையிலும்; ஒரு மணிமண்டபம் அமைக்கப்படும்.
 
ஜான் பென்னிகுயிக் நினைவைப் போற்றும் வகையில், தற்போது தேனி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படும்" என்றார்.
பின் செல்ல