Published:Updated:

தமிழ் இருக்கை - தமிழ்மகன்

தமிழ் இருக்கை - தமிழ்மகன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழ் இருக்கை - தமிழ்மகன்

படம் : பா.காளிமுத்து

தமிழ் இருக்கை - தமிழ்மகன்

படம் : பா.காளிமுத்து

Published:Updated:
தமிழ் இருக்கை - தமிழ்மகன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழ் இருக்கை - தமிழ்மகன்
தமிழ் இருக்கை - தமிழ்மகன்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைக்க, தமிழர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டிய தருணம் இது. `தமிழ் இருக்கை என்றால் என்ன?’ என்பதில் தொடங்கி அது அமையப்பெறுவதால் என்ன நன்மை... அதற்குப் பணம் செலுத்த என்ன செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கேள்விகள் தமிழர்கள் மத்தியில் இருக்கின்றன.

உலகின் முதன்மையான பல்கலைக்கழகமான ஹார்வர்டில் தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகள் செய்வதற்கு ஓர் இருப்பிடம் தேவை. அதையே, `இருக்கை அமைத்தல்’ என்கிறார்கள். கிரேக்கம், தமிழ், ஹீப்ரு, சீனம், சமஸ்கிருதம், லத்தீன், பாரசீகம், அரபு ஆகியவை உலகச் செம்மொழிப் பட்டியலில் உள்ள தொன்மையான மொழிகள். இதில் தமிழ் தவிர மற்ற ஏழு மொழிகளுக்கும் உலகின் பல முக்கியமான பல்கலைக்கழங்களில் இருக்கைகள் உள்ளன. அங்கு தொடர்ந்து அம்மொழிகள் குறித்துப் பல்வேறு ஆய்வுப்பணிகளும் நடைபெறுகின்றன. 14 ஆயிரம் பேர் பேசிவரும் சமஸ்கிருதத்துக்கு உலக அரங்கில் இருக்கும் முக்கியத்துவத்துக்கும் இத்தகைய இருக்கைகள்தான் காரணம். யோகாவுக்கு ஐ.நா சபை, `உலக யோகா தினம்’ அறிவிப்பதும் இதனால்தான். தமிழுக்கு இதுவரை இருக்கை உருவாக்கப்படவில்லை. தமிழக மேடைகளில் மட்டுமே தமிழின் சிறப்பைச் சொல்லிக்கொண்டு இருந்தால், உலக அரங்கில் அது வெளிப்பட வாய்ப்பு இல்லை. அதற்காகவே இந்த முயற்சி.

செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவுசெய்ய, அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளைச் சாராதிருத்தலும் வேண்டும் என்பது விதி. செம்மொழிப் பட்டியலில் உள்ள இந்த எட்டு மொழிகளில் மற்ற மொழிகளைவிட பழமையானதும் தனித்துவமானதுமானதுமாக இருப்பது தமிழ். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க, பல ஆண்டுகளாக முயற்சிசெய்தும் அனுமதி கிடைக்காமல் இருந்தது. அமெரிக்காவில் வசித்துவரும் மருத்துவர்கள் எஸ்.டி.சம்பந்தம், விஜய் ஜானகிராமன் இருவரும் அதற்கான முயற்சியில் இறங்கினர். `தமிழ் இருக்கைக்கு பதிவுக் கட்டணமாக ஒரு மில்லியன் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும்’ என்றது ஹார்வர்ட் பல்கலைக்கழகம். அந்தத் தொகையை அவர்கள் இருவரும் செலுத்திவிட்டனர். அதாவது சராசரியாக ஆளுக்கு மூன்று கோடி ரூபாய்.

இருக்கை அமைக்க மொத்தம் ஆறு மில்லியன் டாலர் தேவை. அதில் ஒரு மில்லியன் செலுத்திவிட்டனர். ஐந்து மில்லியன் டாலர் இன்னும் தேவை. அதை தமிழர்களின் பங்களிப்பாகச் சேர்த்து முடிக்க வேண்டும். பல செம்மொழிகளுக்கு இருக்கை அமைக்கும்போது, அதை ஓரிரு தனி நபர்கள் சேர்ந்து நிதியளித்து அமைத்தனர். ஒரு மொழிக்கு அந்த மொழியைப் பேசும் மக்கள் அனைவரும் சேர்ந்து நிதி அளிப்பது ஒரு வகையில் பெருமைக்குரியது. 100 ரூபாயோ, 1,000 ரூபாயோ, லட்ச ரூபாயோ எவ்வளவு வேண்டுமானாலும் அளிக்கலாம். (காண்க: http://harvardtamilchair.com/) இந்தியாவுக்கான தொடர்பாளராக டாக்டர் எம்.ஆறுமுகமும், அமெரிக்கத் தொடர்பாளராக டாக்டர்கள் எஸ்.டி.சம்பந்தமும் விஜய் ஜானகிராமனும், கனடாவுக்கான தொடர்பாளராக எழுத்தாளர் அ.முத்துலிங்கமும் செயலாற்றுகிறார்கள்.

`தமிழன்னைக்கு சென்னையில் முப்பெரும் விழா’ என்ற தலைப்பில் ஜூன் 25-ம் தேதி, சென்னையில் அறிமுக விழா நடைபெற்றது. கவிஞர் பழநிபாரதி எழுதிய ஹார்வர்டு தமிழ் இருக்கை கீதம் வீடியோ சி.டி. வெளியீடு, தமிழ் இருக்கையின் தேவை விளக்கம், அறக்கொடை அறிமுகம் ஆகியவற்றுக்கான முப்பெரும் விழாவாக அமைந்தது.

`தாயே தமிழே வணக்கம்... உன் உறவே உயிர்மெய் விளக்கம்’ என்ற பழநிபாரதியின் பாடலுக்கு தாஜ்நூர் இசையமைத்திருந்தார். சீர்காழி சிவசிதம்பரம், நித்ய மகாதேவன் பாடியிருந்தனர். இசையால் தமிழுக்குச் சூட்டப்பட்ட மகுடம் அது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism