Published:Updated:

துருப்பிடித்த ஆணியும் பழைய அட்டைப் பெட்டிகளும் - கே.முரளிதரன்

துருப்பிடித்த ஆணியும் பழைய அட்டைப் பெட்டிகளும் - கே.முரளிதரன்
பிரீமியம் ஸ்டோரி
துருப்பிடித்த ஆணியும் பழைய அட்டைப் பெட்டிகளும் - கே.முரளிதரன்

துருப்பிடித்த ஆணியும் பழைய அட்டைப் பெட்டிகளும் - கே.முரளிதரன்

துருப்பிடித்த ஆணியும் பழைய அட்டைப் பெட்டிகளும் - கே.முரளிதரன்

துருப்பிடித்த ஆணியும் பழைய அட்டைப் பெட்டிகளும் - கே.முரளிதரன்

Published:Updated:
துருப்பிடித்த ஆணியும் பழைய அட்டைப் பெட்டிகளும் - கே.முரளிதரன்
பிரீமியம் ஸ்டோரி
துருப்பிடித்த ஆணியும் பழைய அட்டைப் பெட்டிகளும் - கே.முரளிதரன்
துருப்பிடித்த ஆணியும் பழைய அட்டைப் பெட்டிகளும் - கே.முரளிதரன்

தேவதைக் கதைகளில் எல்லாமே சர்வசாதாரணமாக நடக்கும். ஒரு துருப்பிடித்த ஆணியை, இளவரசன் சுவற்றில் இருந்து பிடுங்கினால் போதும்... எல்லோருக்கும் சாபவிமோசனம் கிடைத்துவிடும். ஆனால், நிஜத்தில் அப்படியா நடக்கிறது?

2012-ம் ஆண்டில் பிரிட்டனிலிருந்து வெளிவரும் `தி கார்டியன்’ நாளிதழில் வெளிவந்த ஒரு கட்டுரை, கதை கேட்ப வர்களிடமும் சொல்பவர்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, இதுவரை எழுத்தில் வந்திராத சுமார் 500 மந்திரக் கதைகள் (Fairy tales) கிடைத்திருக்கின்றன என்பதுதான் அந்தச் செய்தி. 19-ம் நூற்றாண்டில், ஃபிரான்ஸ் சேவியர் வோன் சோன்வெர்த் (1810-1886) என்ற ஒருவர் பவேரியாவில் வாழ்ந்துவந்தார் (பவேரியா தற்போது ஜெர்மனியின் ஓர் அங்கமாக இருக்கிறது). பவேரிய ராஜாங்கத்தில் அரசன் இரண்டாம் மக்ஸிமிலனின் அந்தரங்கச் செயலராக இருந்தவர், பிறகு அந்நாட்டின் நிதி அமைச்சகத்தில் பணிபுரிந்தார். இந்த மனிதருக்கு நாட்டுப்புறவியலில் பெரும் ஆர்வம் உண்டு. இதனால், அவர் அப்பகுதி மக்களின் நாட்டுப்புறப் பழக்க வழக்கங்களைத் திரட்டி, ஒரு புத்தகமாக வெளிட்டார். ஒருவரும் படிக்கவில்லை. மனிதர் மனம் தளராமல், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் புழங்கும் வாய்மொழிக் கதைகளைத் தொகுக்க ஆரம்பித்தார்.

தறிநெய்பவர்கள், கொல்லர்கள், விவசாயிகள் என நூற்றுக்கணக்கான வர்களிடம் பேசி அவற்றைத் தொகுத்தார். ஆனால், பதிப்பகங்கள் இதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. அதனாலோ, என்னவோ அந்தக் கதைகளைப் பதிப்பிக்காமலேயே இறந்துபோனார் சோன்வெர்த். அந்தக் கதைகளின் கதி என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், எரிகா ஐஷன்ஷீர் என்ற முன்னாள் ஆசிரியை, சோன்வெர்த் இப்படி கதைகளைத் தேடித் திரிந்து தொகுத்ததை அறிந்துகொண்டார். அவரது தேடல் ஜெர்மனியில் இருக்கும் சிறு நகரமான ரோகன்ஸ்பர்கில் இருக்கும் நகராட்சி அலுவலத்தின் ஆவணக் காப்பகத்தில் கொண்டுபோய் நிறுத்தியது. ரோகன்ஸ் பர்க் ஆவணக் காப்பகத்தில் திறக்கப்படாமலேயே இருந்த 30 அட்டைப் பெட்டிகளைக் கண்டுபிடித்து எரிகா ஐஷன்ஷீர் திறந்தார். அவர் அந்தப் பெட்டிகளைத் திறந்தபோது, பாழடைந்த குகையில் இருந்த துருப்பிடித்த ஆணியை இளவரசன் பிடுங்கினான். ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் கதைகளுக்கு சாபவிமோசனம். இது நடந்தது 2009-ம் ஆண்டில்.

துருப்பிடித்த ஆணியும் பழைய அட்டைப் பெட்டிகளும் - கே.முரளிதரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எரிகா கண்டெடுத்த அந்தப் பெட்டிகளுக்குள் சோன்வெர்த் தொகுத்த நாட்டுப்புறக் கதைகளின் கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. அதற்கு முன்பு வெளிஉலகுக்குத் தெரியாத கதைப் புதையல் அது. கிட்டத்தட்ட ஐநூறு இருக்கும். உடனடியாக அந்தக் கதைகளைச் செப்பனிட்டு, வரிசைப்படுத்தி ஜெர்மனியில் பதிப்பித்தார் எரிகா. இப்போது, அவற்றில் சில கதைகள் ஆங்கிலத்தில் `The Turnip Princess’ என்ற பெயரில் மரியா ததார் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. புகழ்பெற்ற `கிரிம்ஸ் கதைகளை’த் தொகுத்த கிரிம்ஸ் சகோதரர்களே சோன்வெர்த்தைப் புகழ்ந்திருக்கிறார்கள். ஆனால், கிரிம்ஸ் சகோதரர்களுக்கும் சோன்வெர்த்துக்கும் மிக முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. கிரிம்ஸ் தொகுத்த `தேவதைக் கதைகள்’, கடந்தகாலப் பெருமிதத்தையும் தேசிய அடையாளத்தையும் நிறுவ முயல்கின்றன என்றால், சோன்வெர்த் பவேரியாவின் வாய்மொழி மரபை ஆவணப்படுத்தும் முயற்சியாகவே இந்தக் கதைகளைத் தொகுத்தார். கிரிம்ஸ் தொகுத்த கதைகளிலும் ஆண்டர்ஸன் தொகுத்த கதைகளிலும் இளவரசிகளை மையமாகக்கொண்டே கதைகள் சுழலும். இளவரசிகள் அழகாக இருப்பார்கள்; ஆபத்தில் இருப்பார்கள்; அவர்களைக் காப்பாற்றுவதும் மந்திரத்திலிருந்து விடுவிப்பதுமே கதையின் நோக்கமாக இருக்கும். இளவரசி இல்லாவிட்டால் அழகிய சிறுமி. அவளை ஓநாய் துரத்தும். ஆனால், சோன்வெர்த்தின் கதைகளில் ஆண் குழந்தைகளுக்கும் இளவரசர்களுக்கும் இடம் இருக்கிறது.

`ஒரு காலத்தில் தொலைதூர நாடு ஒன்றை ராஜா ஒருத்தன் ஆண்டுவந்தான்’ என்று இந்தக் கதைகள் ஆரம்பிப்பது இல்லை. எடுத்த உடனேயே, `இளவரசியை மந்திரவாதி கடத்திக்கொண்டு போய்விட்டான்’ என்றுதான் அதிரடியாகத் தொடங்குகின்றன. இவற்றில் இலக்கியச் சுவை இல்லை எனச் சிலர் கூறக்கூடும்; சில கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்ல முடியாது. ஆனால், இவையெல்லாம் இந்தப் புத்தகத்தின் மதிப்பை எந்தவிதத்திலும் குறைத்துவிடாது.

தமிழ் இலக்கிய இதழ்களில் இம்மாதிரி கதைகள் வெளியாவதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆனால், `தி கார்டியன்’ இதழிலும் `தி நியூயார்க்கர்’ இதழிலும் இவற்றில் சில கதைகளின் மொழிபெயர்ப்புகள் வெளியாகியிருக்கின்றன. கிரிம்ஸ் சகோதரர்கள், ஆண்டர்சன், சார்ல் பெரோ ஆகியோரை `தேவதைக் கதைகளின் மும்மூர்த்திகள்’ என்பார்கள். இந்தப் புத்தகத்தின் மூலம் அந்தப் பட்டியலில் தற்போது சோன்வெர்த்தும் இணைகிறார்.

நம் எல்லோருடைய வாழ்விலும் ஒரு துருப்பிடித்த ஆணி இருக்கிறது. அதைப் பிடுங்கி, சாப விமோசனம் அளிக்கும் இளவரசனுக்காகக் காத்திருக்கிறோம். இந்தக் கதைகளுக்குள் நுழையும்போது, ஒருவேளை அந்த இளவரசனை நாம் சந்திக்கக்கூடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism