Published:Updated:

சசிகலாவிடம் மறைமுகமாகப் பேசிய ஆளுங்கட்சி எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்! - போட்டுடைத்த திவாகரன்

சசிகலாவிடம் மறைமுகமாகப் பேசிய ஆளுங்கட்சி எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்! - போட்டுடைத்த திவாகரன்
சசிகலாவிடம் மறைமுகமாகப் பேசிய ஆளுங்கட்சி எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்! - போட்டுடைத்த திவாகரன்

பரோலில் வந்த சசிகலாவை ஆளுங்கட்சி எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மறைமுகமாகச் சந்தித்துப் பேசியதாகத் திவாகரன் குறிப்பிட்டுள்ளார். 
 

சசிகலாவிடம் மறைமுகமாகப் பேசிய ஆளுங்கட்சி எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்! - போட்டுடைத்த திவாகரன்

சசிகலா தன் கணவர் நடராசனின் இறுதிச் சடங்குக்காகக் கடந்த 20-ம் தேதி பரோல் மூலம் பெங்களூரு சிறையிலிருந்து வெளியே தஞ்சாவூர் வந்தார். 21-ம் தேதி காலை நடராசனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தஞ்சாவூரில் உள்ள பரிசுத்தம் நகர் இல்லத்திலேயே சசிகலா தங்கினார். அப்போது அவரைத் தினமும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் நேற்று நடராசன் படத்திறப்பு விழா நடைபெற்றது.

சசிகலாவிடம் மறைமுகமாகப் பேசிய ஆளுங்கட்சி எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்! - போட்டுடைத்த திவாகரன்

இந்த நிலையில் 15 நாள்கள் பரோலில் சசிகலா வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இன்று காலை 8.45 மணியளவில் சசிகலா பரோல் முடிந்து பெங்ளூரு சிறைக்குக் கிளம்பினார். அவருடன் தினகரனும் உடன் இருந்தார். அப்போது, ஏராளமான நிர்வாகிகள் அங்கு கூடியிருந்தனர். 

இதையடுத்து பேட்டியளித்த சசிகலா சகோதரர் திவாகரன், ``சசிகலாவுக்கு 15 நாள்கள் பரோல் கேட்டோம்,10 நாள்கள்தான் தந்தார்கள். முன்னாள் தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு, நடராசனின் நண்பர். நடராசன் இறந்த அன்று வர முடியாததால் இன்று சசிகலாவை சந்தித்து ஆறுதல் அளிக்க வந்தார். பரோலில் வந்த சசிகலாவை ஆளுங்கட்சி எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மறைமுகமாகச் சந்தித்துப் பேசினர். தங்கள் பதவி பறி போய்விடும் என்பதற்காக அவர்கள் சசிகலாவை நேரடியாகச் சந்திக்கவில்லை’’ என்றார்.