Published:Updated:

தவறு செய்தவர்கள் தப்ப முடியாது: பிரதமர் உறுதி

தவறு செய்தவர்கள் தப்ப முடியாது: பிரதமர் உறுதி

புதுடெல்லி, பிப்.24,2011

தவறு செய்தவர்கள் தப்ப முடியாது: பிரதமர் உறுதி

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு, காமன்வெல்த் போட்டி ஏற்பாடு உள்ளிட்ட விவகாரங்களை மேற்கோள்காட்டி, தவறு செய்தவர்கள் எவரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார் பிரதமர் மன்மோகன் சிங்.##~~##

மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது, எதிர்கட்சிகள் எழுப்பிய விவகாரங்கள் ஒவ்வொன்றுக்கும் உடனுக்குடன் பதிலளித்துப் பேசினார் பிரதமர்.

கறுப்பு பணம்...

சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பது தொடர்பாக பிஜேபியினர் கேள்வி எழுப்பியபோது, இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளுடனும் கூடிப் பேசி அவர்களது உதவியுடன் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்போம். 

அனைத்துக் கட்சிகளின் ஆரோக்கியமான கருத்துகள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சுமுகத் தீர்வு காணப்படும்.

கறுப்புப் பண விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் வேண்டுகோள் வைப்பதைப் போல கறுப்புப் பணத்தை நாட்டுக்கு மீட்க எண்ணுவதில் நாங்களும் ஒருமித்தக் கருத்தைக் கொண்டுள்ளோம்.

கறுப்புப் பண பதுக்கல் என்பது ஏதோ கடந்த நான்கைந்து ஆண்டுகள் உள்ள விவகாரம் என்று நினைக்க வேண்டாம். இது ஆண்டாண்டு காலமாக இருந்து வந்துள்ளது," என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

2ஜி ஸ்பெக்ட்ரம் + காமன்வெல்த் போட்டி ஊழல்...

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் மற்றும் காமன்வெல்த் போட்டி ஊழல்கள் தொடர்பான விவாத்தில், "தொலைத்தொடர்பு மற்றும் காமன்வெல்த் போட்டி விஷயங்களில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான நிலைகளை நான் மறுக்கவில்லை.

நம்பகத்தன்மையானதும், நடவடிக்கைக்குரிய ஆதாரங்களும் கண்டுணரப்படும்போது, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். குற்றச்சாட்டுகள் எழுந்து, சிபிஐ விசாரணை தொடங்கியபோது ஒரு முதல்வரும், மத்திய அமைச்சரும் ராஜினாமா செய்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நமது பொது வாழ்க்கையில் தூய்மையைக் கடைபிடிப்பதற்காக எதை வேண்டுமானாலும் அரசு செய்யும் என இந்த அவையில் உறுதி கூறுகிறேன்.

ஒரு முறைகேடு நிகழ்ந்தது என்று தெரியவந்தால், அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்களை சட்டரீதியாக தண்டிக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது," என்றார்.

தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார் பிரதமர்.

இறுதியில், "தவறு செய்த எவரும் தண்டனையில் இருந்து தப்பமுடியாது," என அழுத்தமாகச் சொன்னார் பிரதமர் மன்மோகன் சிங்.

எஸ் பேண்ட் ஒதுக்கீடு...

எஸ்-பேண்ட் விவகாரம் குறித்து கூறுகையில், "தேவாஸ் மல்ட்டிமீடியா நிறுவனத்துக்கும், இஸ்ரோவின் ஆன்டிரிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு பிரதமர் அலுவலகத்தில் கேட்டதாகக் கூறுவதற்கு இடமில்லை. அந்த மட்டத்துக்கு அந்த ஒப்பந்தம் ஒருபோதும் வரவில்லை," என்றார்.

தேவாஸ் நிறுவனத்துடன் இஸ்ரோவின் ஆந்த்ரிக்ஸ் நிறுவனம் வழக்கமான முறையில் ஒப்பந்தம் செய்துகொண்டது. அது அரசின் ஒப்புதலுக்காக வரவில்லை.

எனினும் செயற்கைக்கோள் ஏவும் விவகாரம் அமைச்சரவைக்கு வந்தது. ஆனால் தேவாஸ் -ஆன்டிரிக்ஸ் ஒப்பந்தம் அமைச்சரவைக் குறிப்பில் குறிப்பிடப்படவில்லை.

இஸ்ரோவின் எஸ்.பேண்ட் அலைவரிசைகளை வர்த்தக ரீதியாக ஒதுக்கீடு செய்வது இல்லை என அரசு உறுதியான முடிவு எடுத்துள்ளது," என்றார் அவர்.

தமிழக மீனவர் பிரச்னை...

தமிழக மீனவர்வர்கள் பிரச்னை குறித்து பிரதமர் கூறுகையில், "இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் வந்து விட்டால் அவர்களை கைது செய்யலாமே தவிர, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது," என்றார்.

அடுத்த கட்டுரைக்கு