Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்

உதயமூர்த்தி, திருவாரூர்

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'எங்களைக் கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக் கொண்டார் ஜெயலலிதா!’ என்கிறாரே சி.பி.எம். செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்?

கழுகார் பதில்கள்

கறிவேப்பிலையாக இருந்தால், எடுத்துப் போடத்தான் செய்வார்கள். உதாசீனப்படுத்த முடியாத உப்பாக மாறுங்கள். அதற்கு, வாக்கு வங்கியை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்!

பாலசுப்பிரமணி, காங்கேயம்

கழுகார் பதில்கள்

'நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இது கவலை அளிப்பதாக உள்ளது என்றாலும் விலைவாசியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்’ என்று பிரணாப் முகர்ஜி சொல்கிறாரே?

##~##

சமீப காலமாக, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொல்லும் பொருளா தாரத் தத்துவம் எதுவும் எனக்குப் புரியவே இல்லை. மன்மோகன் சிங், மான்டேவ்சிங் அலுவாலியா சொல்வதைப் படித்தால், நமக்குக் கொஞ்சநஞ்சம் இருக்கும் பொருளா தார அறிவும் மழுங்கிப் போகிறது. இது போதாது என்று பிரதமருக்கு புதிய நிதி ஆலோசகராக வந்திருக்கும் ரகுராம் ராஜன் என்பவர், 'விவசாயத்தை நம்பி எதற்காக 60 சதவிகிதம் பேர் வாழ வேண்டும்? வெறும் 5 சதவிகிதம் பேர் விவசாயம் செய்தாலே போதுமே!’ என்கிறார். போகிற போக்கைப் பார்த்தால், விவசாயத்துக்கே நிறையத் தடைகள் போட்டுவிடுவார்கள் போல!

 குமரேசன், குமாரபாளையும்

கழுகார் பதில்கள்

மத்திய அமைச்சர்கள் மட்டும் அல்லாமல் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சொத்துக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று ராகுல் சொன்னது உமக்குத் திருப்தியா?

ராகுல் சொன்னதில் திருப்திதான்! இப்படி ஒரு விதிமுறை வகுக்கப்பட வேண்டும் என்று மன்மோகன் சிங்குக்கு ராகுல் பரிந்துரைப்பதில்தான் அதிருப்தி!

பிரதமர் இதுபற்றி பரிசீலனை செய்வார்... செய்வார்... செய்துகொண்டே இருப்பார்... கடைசியில் காரியத்துக்கு ஆகாது!

 விஜயராகவன், கயத்தாறு

கழுகார் பதில்கள்

கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதாகச் சொல்கிறாரே கருணாநிதி?

தி.மு.க-வின் ஒரே ஒரு எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற 1991 சட்டமன்றத் தேர்தலில்கூட தி.மு.க. 22.67 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 23 - 26 சதவிகித வாக்குகளை நிரந்தரமாக வைத்திருக்கும் தி.மு.க., கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட, உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு சதவிகிதம் அதிகமாகக் காரணம், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பெரும் கெட்ட பெயர்களைச் சம்பாதித்த தி.மு.க. அமைச்சர்கள் யாரும் இந்தத் தேர்தலில் போட்டியிடாததுதான். அந்த மந்திரிகளுக்கு எதிரான ஓட்டு குறையாததால், வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது.

 கதிரேசன், காரைக்கால்

கழுகார் பதில்கள்

கடாஃபியின் முடிவு?

கழுகார் பதில்கள்

அரசு அதிகாரத்தை, அரச பயங்கரவாதமாக மாற்றி, பாதகம் செய்யும் ஆட்சியாளர்கள் அனைவருக்குமான பாடம் அது.

கடாஃபியை தனது மானசீக வழிகாட்டியாக சொல்லிக்கொள்பவர் மகிந்த ராஜபக்ஷே. அவர் கொட்டம் எப்போது அடங்குமோ?

 சரவணப் பெருமாள், தஞ்சாவூர்

கழுகார் பதில்கள்

எங்கள் பகுதிக்குள் அரசியல் பிரமுகர் ஒருவரின் கார் சென்றது. பொதுமக்களில் சிலர் அவருக்கு வணக்கம் வைத்தார்கள். அவர் பதில் வணக்கமே வைக்கவில்லை. இதெல்லாம்தான் வி.ஐ.பி-யின் அடையாளமா?

மிகப் பெரிய வி.வி.ஐ.பி. சொன்னதைச் சொல்கிறேன் கேளுங்கள்!

ராமாவரம் தோட்டத்தில் இருந்து முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் கார் வருகிறது. அவருடன் வலம்புரிஜான் இருக்கிறார். சைதாப்பேட்டை பாலத்தின் அருகில்... எம்.ஜி.ஆரின் காரைப் பார்த்துப் பலரும் வணக்கம் வைக்கிறார்கள். பதிலுக்கு காரின் உள்ளே இருந்த எம்.ஜி.ஆரும் வணக்கம் வைக்கிறார்.

'வெளியில் போகிறவர்கள், வருகிறவர்கள் கும்பிடுவதை நீங்கள் பார்க்கலாம். ஆனால், நீங்கள் கும்பிடுவதை அவர்கள் பார்க்க முடியாதே?’ என்று வலம்புரிஜான் கேட்கிறார். 'அவர்கள் பார்க்கிறார்களோ, இல்லையோ... நான் அவர்களைக் கும்பிடத்தானே வேண்டும். சினிமாக்காரனாக இருந்த என்னை இவர்கள்தானே முதலமைச்சராக கோட்டையிலே உட்காரவைத்தார்கள்!’ என்று சொன்னார் எம்.ஜி.ஆர்.

இந்தப் பணிவும் நன்றி உணர்ச்சியும் எல்லா மனிதர்களுக்கும் வேண்டும். ஓட்டு வேட்டையாடுபவர் களுக்கு இன்னும் அதிகமாகவே வேண்டும்!

 கணேஷ்குமார், மதுரை

கழுகார் பதில்கள்

தென் மாவட்ட சாதி மோதல்களை நிரந்தரமாக நிறுத்த வழியே இல்லையா?

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. அதற்கான வழிமுறையை இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் யாரும் யோசிக்கவில்லை. ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் சிம்சன், சமீபத்தில் ஒரு கருத்துச் சொல்லி இருக்கிறார்.

கழுகார் பதில்கள்

'பரமக்குடிக்கு அருகே அமைந்திருக்கும் கீழ்க்கன்னிச்சேரி மக்களுக்கும் கீழத்தூவலைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே 1957-ல் போடப்பட்ட ஒப்பந்தம் ஒன்று இன்றும் நடைமுறையில் இருக்கிறது. ஒருவர், மற்றவரின் சாலையைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அது. கீழ்க்கன்னிசேரி மக்கள் பரமக்குடிக்கு வர வேண்டுமானால், கீழத்தூவலைத் தாண்டி 15 கி.மீ பயணம் செய்தாலே போதும். ஆனால், 70 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லும் வழியாகவே இன்றும் பரமக்குடிக்கு வருகிறார்கள். அதே போல் கீழத்தூவல் மக்கள் கமுதிக்கு வர வேண்டுமானால் கீழ்க்கன்னிச்சேரி வழியைத் தவிர்த்து சுற்றித்தான் வரவேண்டும். இந்த இரண்டு கிராமங்களுக்கும் இடையே இருக்கும் பகையை முடிவுக்குக் கொண்டுவர இதுவரையிலும் அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 50 ஆண்டு கால வெறுப்பு உணர்வு தலைமுறைகள் கடந்தும் வளர்த்தெடுக்கப்படுகிறது’ என்கிறார் சிம்சன்.

இன்றைய அரசு, இரண்டு சமூகத்தினர், இந்து மத ஒற்றுமையை வலியுறுத்துபவர்கள்... இதனை மையப்புள்ளியாகக்கொண்டு செயல்பட்டால், நல்ல தொடக்கமாக அமையும்!

 வைத்தியநாதன், ஓசூர்

கழுகார் பதில்கள்

பெங்களூரு... நல்ல ஊரா?

வரம் கொடுக்கும் கோயிலும்... சாபம் வழங்கும் கோர்ட்டும்... இருக்கும் ஊரை என்னவென்று சொல்வது?

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism