Published:Updated:

மத்திய அரசை கண்டித்து போராட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

மத்திய அரசை கண்டித்து போராட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
மத்திய அரசை கண்டித்து போராட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
மத்திய அரசை கண்டித்து போராட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: மத்திய அரசை கண்டித்து வருகிற 24 ஆம் தேதியன்று அதிமுக  தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா  வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமாக  விளங்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில், மாநில அரசின்  உரிமைகளை பறிப்பதையும், காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளின் நியாயமான  கோரிக்கைகளை நிராகரிப்பதையும், இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும்  நடவடிக்கைகளை எடுப்பதையும், திமுக அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி  அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
 
தமிழக அரசின் தேவைகளைப் பற்றியும், உரிமைகளைப் பற்றியும், திட்டங்களைப்  பற்றியும் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவிப்பதற்கு கூட போதிய கால  அவகாசத்தை வழங்க மத்திய அரசு மறுக்கிறது.
 
இதே போன்று, விஷம் போல் உயர்ந்து கொண்டே இருக்கும் விலைவாசியை  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு,  சமையல் எரிவாயு விலை உயர்வு, ரயில்வே கட்டண உயர்வு என அனைத்தையும்  உயர்த்தி விலைவாசி மேலும் உயர வழி வகுக்கும் நடவடிக்கைகளை, மக்களை வாட்டி  வதைக்கும் நடவடிக்கைகளை, மக்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கும்  நடவடிக்கைகளை திமுக அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்து  வருகிறது.
 
தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கின்ற; காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடாத; தமிழகத்திற்கு தேவையானவற்றை தர மறுக்கின்ற மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளையும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருக்கின்றன.
 

##~~##
இந்நிலையில் ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ்  கூட்டணி அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், 24 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப்  பேரவையின் சார்பில், அரசு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு  அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
 
கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் இணைந்து  செயல்பட்டு வரும் அனைத்து இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும்  இந்த ஆர்ப்பாட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு, திமுக அங்கம் வகிக்கும்  காங்கிரஸ் தலைமையிலான சர்வாதிகார மத்திய கூட்டணி அரசுக்கு தங்களுடைய கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.
 
மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில்,  பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று  கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறி உள்ளார்.