Published:Updated:

''நாங்க ஃபுல் டைமா கட்சி நடத்தலை!''

சொல்கிறார் 'கொங்கு' ஈஸ்வரன்!

''நாங்க ஃபுல் டைமா கட்சி நடத்தலை!''

சொல்கிறார் 'கொங்கு' ஈஸ்வரன்!

Published:Updated:
##~##

'ஜீரோவில் ஆரம்பித்து ஹீரோவான கட்சிகளை எவ்வளவோ உதாரணம் காட்ட முடியும். ஆனா, ஹீரோவாக ஆரம்பித்து மளமளவெனச் சரிந்த கட்சின்னா... அது இந்த கொங்கு முன்னேற்றக் கழகம்தான்.’ - சில நாட்களாக இப்படித்தான் சொந்தக் கட்சி நபர்களாலேயே நையாண்டி விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது கொ.மு.க.! 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கோவையில் துவக்கப்பட்டது 'கொங்கு முன்னேற்றக் கழகம்.’ பிறந்த வேகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களம் இறங்கி... வெற்றி அடையாவிட்டாலும், லட்சக் கணக்கில் வாக்குகளைப் பெற்று வெற்றி வேட்பாளரை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுத்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஏழு இடங்களை அள்ளிக் கொடுக்கும் அளவுக்குப் பலம் காட்டினர். அப்படிப்பட்ட கொ.மு.க. சமீப காலமாக சரிந்துகொண்டு இருப்பதாக அதன் ஆதர வாளர்களே சொல்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நாங்க ஃபுல் டைமா கட்சி நடத்தலை!''

சில நாட்களுக்கு முன் கொ.மு.க-வின் கோவை மாநகர அமைப்புகள் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. இந்த அதிரடி முடிவு குறித்து விளக்கிய கோவை மாநகர இளைஞர் அணி தலைமை அமைப்பாளராக இருந்த வெள்ளியங்கிரி, ''கவுண்டர் சமுதாயத்தை மையமா வெச்சுத்தான் கொ.மு.க. ஆரம்பமாச்சு. 'நம்ம சமுதாயத்துக்கு நல்லது பண்ண ஒரு கட்சி உருவாகி இருக்கு’னு சொல்லி, குடும்பம் குடும்பமா அந்தக் கட்சியில் உறுப்பினர் ஆனோம். கட்சியைக் கடைக்கோடி மக்கள் வரை கொண்டுபோகோணும்னு சொல்லி ஒவ்வொரு நிர்வாகியும் பரம்பரை நகையைக்கூட வித்து, அடமானம்வெச்சு செலவு பண்ணினோம். ஆனா, எங்களோட நம்பிக்கையை கொஞ்ச காலமாவே தவிடுபொடி ஆக்கிட்டாங்க கொ.மு.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரனும், தலைவர் பெஸ்ட் ராமசாமியும்.

குறிப்பா, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வோட கூட்டணி வைக்கணும்னு இரண்டாம் கட்ட நிர்வாகிகளில் ஆரம்பிச்சு கடைசித் தொண்டன் வரை சொன்னோம். ஆனா, தலைமை நிர்வாகிகளோ தி.மு.க.கூட கூட்டணி வெச்சுக்கிட்டாங்க. கேட்டதுக்கு, 'அ.தி.மு.க-வில் நம்மை மதிச்சுக் கூப்பிடலை, பேசலை’னு சால்ஜாப்பு சொன்னாங்க. இவங்க தி.மு.க.கூட கூட்டணிவைக்கக் காரணமே பணம்தான்னு எங்க மக்கள் பேசிக்கிறாங்க. ராசிபுரத்தில் நடந்த பொதுக் குழுவில் இது தொடர்பா வெளிப்படையாக் கேட்டதுக்கு ஈஸ்வரன் வாயையே திறக்கலை. தி.மு.க.கூட இவங்க கூட்டணி வெச்சதோட விளைவு ஏழு தொகுதியிலேயும் ஏப்பசாப்பையாத் தோத்தோம்.

அதே மாதிரிதான் இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் பொதுக் குழுவைக் கூட்டி முடிவு பண்ணாம, இவங்க

''நாங்க ஃபுல் டைமா கட்சி நடத்தலை!''

இஷ்டத்துக்கு பி.ஜே.பி.கூட கூட்டுப் போட்டாங்க. ஆக, இவங்க பின்னாடி அலையுறது மிச்சம் இருக்கிற சொத் துக்கும் குடும்பத்துக்கும் தோதுப்படாதுன்னு புரிஞ்சுக் கிட்டோம். இது போக, பெஸ்ட் ராமசாமிக்கும் ஈஸ்வரனுக்கும் இடையில ஈகோ யுத்தம் உச்சத்தில் நடக்குது. இதைப் பார்த்துட்டுத்தான் இளைஞர் அணி, தொழிற்சங்க அணி, பொறியாளர் அணி உட்பட அத்தனை அமைப்பு களையும் கலைச்சுட்டோம். 'கொங்கு மக்கள் பேரவை’னு ஒரு அமைப்பை ஆரம்பிச்சு எங்க மக்களுக்காகக் குரல் கொடுக்கப்போறோம். பிறகு, பட்டிதொட்டி பஞ்சாயத்துகளில் உள்ள கொ.மு.க. அமைப்புகளும் கலைக்கப்படும். கூடிய சீக்கிரம் காணாமல்போனோர் பட்டியலில் சேரப்போவுது கொ.மு.க.'' என்று படபடத்தார்.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அமைப்பாளரான ராஜா அம்மையப்பனிடம் கேட்டபோது, ''அந்தக் கட்சியில் இருந்ததை நினைச்சு வேதனைப்படுறேன். இப்போ ஒரு முடிவுக்கு வந்து 'தீரன் இளைஞர் இயக்கம்’னு ஒண்ணு துவக்கி, இந்த சமுதாயத்துக்காகத் துடிப்பாச் செயல்படுற முடிவில் இருக்கோம். ஆயிரக்கணக்கான பேரை அழைச்சுட்டுப் போயி வீரபாண்டி ஆறுமுகம் வழி காட்டுதல்படி தி.மு.க-வுல சேரப்போறேன். இனி இங்கே யாருமே 'கொங்கு’ங்கிற பெயரைச் சொல்லிக்கிட்டு அரசியல் லாபம் அடைய விடாம பண்றதுதான் என் குறிக்கோள்!'' என்று கண் சிவக்கிறார்.

மொத்தத்தில் இந்தக் கூத்துபற்றி மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரனிடம் பேசினோம். ''ஏதோ நாலு பேரு தாறுமாறாப் பேசிட்டா, கொ.மு.க. அழிஞ்சுபோச்சுனு சொல்லிட முடியுமா? கோவையில் அமைப்பைக் கலைச்சதா அறிவிச்சவங்க எல்லாம்... எனக்குத் தெரிஞ்சு ஒரு வருஷமா கட்சியில் எந்த வேலையும் பார்க்காத ஆளுங்க. ஒரு விஷயத்தை எல்லாரும் புரிஞ்சுக்கணும்... நாங்க ஃபுல்டைமா கட்சி நடத்தலை. எல்லாருக்கும் தொழில் இருக்குது. அதையும் பார்த்துக்கிட்டு, சமூக சேவைக்காக ஓர் இயக்கத்தைக் கொண்டுபோயிட்டு இருக்கோம் அவ்வளவுதான். தேர்தலில் தோல்வி வர்றது சகஜம். அதுக்காக 'காசு வாங்கிட்டுத் தப்பான கட்சியோட கூட்டணி போட்டோம்’னு சொல்றது அருவருப்பான குற்றச்சாட்டு...'' என்றார் காட்டமாக!

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism