Published:Updated:

தேவர் குருபூஜை...

ஜெ. வருவாரா?

தேவர் குருபூஜை...

ஜெ. வருவாரா?

Published:Updated:
##~##

மீபத்தில், பரமக்குடியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் முடிவதற்குள், ராமநாதபுரத்தில் அடுத்த பரபரப்பு. காரணம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை. அக்டோபர் 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை அந்த சமூக மக்கள் கொண்டாடு வார்கள். கமுதி அருகில் உள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவகத்தில் இந்த விழா நடக்கும். 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேவர் குருபூஜை விழாவுக்கு வந்த மாநிலக் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, தடை செய்யப்பட்ட சாலை வழியாகச் சென்றதால்  வேல் கம்பினால் குத்தப் பட்டார். தொடர்ந்து நடந்த வன்முறையில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார். அதற்குப் பழிவாங்கும் நிகழ்வாக ஆடு மேய்க்கச் சென்ற ஒருவர் அடுத்த ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்டார். மறு ஆண்டில், சவுண்ட் சர்வீஸில் வேலை பார்த்தவரைக் கொலை செய்து கணக்கை நேர் செய்தனர். இதனால், இந்த ஆண்டு தேவர் குருபூஜையின்போது அசம் பாவித சம்பவங்கள் நிகழக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவர் குருபூஜை...

தேவர் குருபூஜை தொடர்பாக எட்டு மாவட்டக் கலெக்டர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடந்தது. மேலும், பாதுகாப்புக்கு என 20 கண்காணிப்பாளர்கள் தலைமையில் 5,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. வன்முறைகளை முன்கூட்டியே கண்டறியும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ஆறு இடங்களில் க்யூ பிரிவு போலீஸ் விங் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் கடந்த ஒரு வாரமாக பதற்றத்துக்கு உரிய கிராமங்களைத் தங்கள் கண்காணிப்பு வளையத் துக்குள் வைத்துள்ளனர்.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு தேவர் குருபூஜை விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவே, உள்துறை செயலாளர் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் நேரடியாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். இதனிடையே, கடந்த ஆண்டு தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்ற ஜெயலலிதா, ''தேவர் பெருமகனார் நினைவிடத்தில் உள்ள அவரது கற்சிலைக்கு தங்கக் கவசத்தை அ.திமு.க. சார்பில் அணிவிப்பேன்'' என்று அப்போது கூறிச் சென்றார். தனது வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் இந்த ஆண்டு வர  வாய்ப்புள்ளது என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.  

''அதே வேளையில், இம்மானுவேல்சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்காமல், தேவர் குருபூஜையில் மட்டும் அவ்வப்போது ஜெய லலிதா  கலந்துகொள்வது, தலித் மக்களை அ.தி.மு.க. தலைமை  புறக்கணிக்கிறதோ என்ற தோற்றத்தையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும், தலித் சமுதாயத் தினர் ஏழு பேர் பலியான இந்த துயரமான நேரத் தில் ஜெயலலிதா பசும்பொன்னுக்கு வருவார் என்பது நிச்சயம் இல்லை'' என்றும் இன்னொரு தரப்பு சொல்கிறது.

வந்தாலும் சிக்கல்... வராமல் போனாலும் நெருக்கடி... என்று சொல்லும் அளவுக்கு தேவர் குருபூஜை நாள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது!

- இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism