Published:Updated:

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம்!#WeWantCMB

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம்!#WeWantCMB
News
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம்!#WeWantCMB

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம்!#WeWantCMB

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, அ.தி.மு.க சார்பில் ஒருநாள் உண்ணாவிரதம் இன்று நடைபெற்றுவருகிறது. 

உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திவருவதைக்  கண்டித்து, அ.தி.மு.க சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கெனவே வெளியான உண்ணாவிரதப் பட்டியலில், இவர்களின் பெயர்கள் இடம்பெறாமல் இருந்த நிலையில், திடீரென இருவரும் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். 

அதேபோன்று, அனைத்து மாவட்ட தலைநகரிலும் அ.தி.மு.க சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதில், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வேலூர் மாவட்டத்தில், அண்ணா கலையரங்கம் அருகில் அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். 

ராமநாதபுரத்தில், இன்று காலை, ராஜகண்ணப்பன் தலைமையில் உண்ணாவிரதம் துவங்கியது. இதில், அமைச்சர் மணிகண்டன், மாவட்டச் செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

புதுக்கோட்டையில், நீதிமன்றத்துக்கு எதிர்புறம்,  அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் வைரமுத்து, நகரசெயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் செல்லத்துரை, ஜாபர்அலி உள்ளிட்ட பலரும் உள்ளனர்.

 திருவாரூரில், அ.தி.மு.க-வினர் மற்றும் விவசாய சங்கத்தினர் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில், புறநகர் மாவட்டங்கள் இணைந்து தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இதில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உட்பட எம்.எல்.ஏ-க்களும் கலந்துகொண்டுள்ளனர்.


தூத்துக்குடியில், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். 

 தஞ்சாவூரில், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகின்றது. இதில் மாசெ கோவிந்தராஜ், பர்கூர் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என மாவட்டம் முழுவதும் இருந்து அதிமுகவினர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர். காவிரி பிரச்னை வாழ்வாதார பிரச்னை என்று கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் சங்கங்கள் ஒரு நாள் கடை அடைப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதேபோல தர்மபுரி மாவட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதம் நடைபெறுகின்றது. இதில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் அணியினர் தனியாக கலந்து கொண்டனர். இதுதவிர உண்ணாவிரதத்தில் அதிமுக நிர்வாகிகள் மிகவும் குறைவாக காணப்பட்டனர். காரணம்..? பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ பழனியப்பன், அரூர் எம்எல்ஏ முருகன் டிடிவி அணியில் இருப்பால் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் பல இதில் கலந்து கொள்ளவில்லை.

திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று திருவள்ளூர் ஆயில் மில் அருகில் காலை ஒண்பது மணிக்கு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு பொன்னேரி எம்எல்ஏவும் மாவட்ட செயலாளருமான பலராமன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் திருத்தணி நரசிம்மன், கும்முடிப்பூண்டி விஜயகுமார், அம்பத்தூர்  அலெக்சாண்டர், மாநில எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சம்பத்குமார் மற்றும் அனைத்து பொறுப்பாளர்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதிலிருந்தும் கட்சி தொண்டர்கள் மகளிர் அணியினர் வேன் மூலம் வந்திருந்தனர். காலையில் பெருமளவில் கூட்டம் இருந்தது. இரண்டு மணிநேரம் கழித்து தொண்டர்கள் டீகடைக்கு சென்று விட்டனர்.நேரம் போக போக படிப்படியாக தொண்டர்களின் கூட்டம்  குறைந்து விட்டது. மதியம் 12 மணிக்கு பிறகு பெருமளவில் தொண்டர்கள் டாஸ்மாக் கடைக்கு சென்று விட்டனர். மாலை கூட்டம் முடியும் தருவாயில் 200  பேர் அளவுக் கூட தொண்டர்கள் இல்லாமல் போய்விட்டனர்.