Published:Updated:

தமிழகம் முழுவதும் அணைகள், ஏரிகள் சீரமைப்புக்கு ரூ.98 கோடி ஒதுக்கீடு!

தமிழகம் முழுவதும் அணைகள், ஏரிகள் சீரமைப்புக்கு ரூ.98 கோடி ஒதுக்கீடு!
தமிழகம் முழுவதும் அணைகள், ஏரிகள் சீரமைப்புக்கு ரூ.98 கோடி ஒதுக்கீடு!
தமிழகம் முழுவதும் அணைகள், ஏரிகள் சீரமைப்புக்கு ரூ.98 கோடி ஒதுக்கீடு!

சென்னை: தமிழகம் முழுவதும் புதிய தடுப்பணைகளைக் கட்டவும், ஏரிகளைச் சீரமைக்கவும் ரூ.98 கோடியில் பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், அனைத்து ஏரிகளிலும் அதிகமான  நீரைத் தேக்கவும் ஏரிகளை தூர் வாருதல், கால்வாய்களை அகலப்படுத்துதல் உள்ளிட்டப் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் வைகை ஆற்றிலிருந்து மாநாடு ஏரி மற்றும் 9 ஏரிகளுக்கு நீர் வழங்க ரூ.12 கோடியே 85 லட்சம் செலவில் இலாடனேந்தல் கிராமத்தில் படுகை அணையைக் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

மானாமதுரை வட்டத்திலேயே வைகை ஆற்றிலிருந்து பார்த்திபனூர் பெரிய, சிறிய ஏரி, வன்னிக்குடி ஏரி மற்றும் இரண்டு ஏரிகளுக்கு நீர் வழங்க ஆத்தூர் கிராமத்தில் ரூ.16 கோடி செலவில் மற்றொரு படுகை அணை கட்டப்படும்.

##~~##
திருச்சி ஸ்ரீரங்கம் எலமனூர் கிராமத்தில் மேலணையின் கீழ் உள்ள பாசன நிலங்களுக்கு நீரைத் திருப்பி விடுவதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மேலணையின் கதவுகளை சீராக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆந்திரத்திலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீரைச் சேமிக்க திருவள்ளூர் மாவட்டம் திருக்கண்டலம் கிராமத்தின் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.35 கோடியில் தடுப்பணை கட்டப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேய் குளம், பொட்டை குளம், கோரம்பள்ளம் ஆகிய ஏரிகளை ரூ.20 கோடி செலவில் மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இவற்றோடு அரியலூர் மாவட்டத்தில் மருதையாற்றின் குறுக்கே அம்பலவார்கட்டளையிலிருந்து சுண்டக்குடி சாலை வரை ரூ.10 கோடியில் பாலம் கட்டுதல், வடசென்னை, எண்ணூர் அதிவிரைவு சாலையில் உள்ள சின்னக்குப்பத்தில் பழுதடைந்துள்ள கடலரிப்பு தடுப்புச் சுவர் ரூ.25 லட்சத்தில் சீரமைத்தல் போன்ற பணிகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.98 கோடியே 67 லட்சம் செலவில் மாநிலம் முழுவதும் இந்தப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகளால் விவசாயிகள் பயிரிடுவதற்கு தொடர்ந்து நீர் கிடைக்கும்" கூறப்பட்டுள்ளது.