Published:Updated:

‘‘விஜயகாந்த் தனிப்பட்டமுறையில் லாபம் அடைந்துள்ளார்!’’

‘‘விஜயகாந்த் தனிப்பட்டமுறையில் லாபம் அடைந்துள்ளார்!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘விஜயகாந்த் தனிப்பட்டமுறையில் லாபம் அடைந்துள்ளார்!’’

திகில் கிளப்பும் சந்திரகுமார்

‘‘விஜயகாந்த் தனிப்பட்டமுறையில் லாபம் அடைந்துள்ளார்!’’

திகில் கிளப்பும் சந்திரகுமார்

Published:Updated:
‘‘விஜயகாந்த் தனிப்பட்டமுறையில் லாபம் அடைந்துள்ளார்!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘விஜயகாந்த் தனிப்பட்டமுறையில் லாபம் அடைந்துள்ளார்!’’

மிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று தே.மு.தி.க அதிருப்தி நிர்வாகிகளைச் சந்தித்து தி.மு.க-வோடு இணைய ஆதரவு திரட்டி வருகிறார் மக்கள் தே.மு.தி.க ஒருங்கிணைப்பாளராக இருந்து தி.மு.க-வில் இணைந்த சந்திரகுமார். இதுகுறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘மக்கள் தே.மு.தி.க-வில் இருந்து தி.மு.க-வில் இணைந்தீர்கள். தற்போது என்ன நடக்கிறது? உங்கள் மூலமாக தே.மு.தி.க-வை உடைக்கப் பார்க்கிறதா தி.மு.க?’’


‘‘தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் சந்திப்பு நடந்து வருகிறது. தேர்தலுக்கு முன்பே தே.மு.தி.க-வில் இருந்து விலகி, எங்களோடு தி.மு.க-வுக்காக உழைத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து வருகிறோம். அவர்கள் அனைவரும் தி.மு.க-வில் இணைய முடிவு எடுத்து இருக்கிறார்கள். நாங்கள் யாரையும் வற்புறுத்தி அழைக்கவில்லை. விஜயகாந்தின் நடவடிக்கைகள் பிடிக்காமல் தனித்து இருப்பவர்களை மட்டுமே சந்திக்கிறோம். வரும் 17-ம் தேதி பிரமாண்ட இணைப்பு விழா தளபதி ஸ்டாலின் தலைமையில் நடக்க இருக்கிறது. சுமார் மூன்று லட்சம் பேர்வரை தி.மு.க-வில் இணைய இருக்கிறார்கள். நாங்கள் எந்த விதத்திலும் இதற்குக் காரணம் இல்லை. தே.மு.தி.க நிர்வாகிகள் தி.மு.க-வில் மட்டும் இணையவில்லை. பி.ஜே.பி., அ.தி.மு.க-விலும் இணைகிறார்களே? இது, முழுக்க முழுக்க விஜயகாந்த்தின் தவறான முடிவால் ஏற்பட்ட சூழ்நிலை. இது முதல்கட்டம்தான். இன்னும் சில நாட்களில் தே.மு.தி.க இருக்காது.’’

‘‘விஜயகாந்த் தனிப்பட்டமுறையில் லாபம் அடைந்துள்ளார்!’’

‘‘நிர்வாகிகள் நீக்கம், வெளியேற்றம் என தே.மு.தி.க வட்டாரமே பரபரப்பாக இருக்கிறதே?’’

‘‘இதுவரை 15-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள், 100-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்கள். இனியும் கட்சியில் இருந்து ஏகப்பட்ட நிர்வாகிகள் வெளியேறிவிடுவார்கள் என்பது அவருக்கே தெரிகிறது. அதனால் முந்திக்கொண்டு வாரம் ஒருவராக நீக்கிக்கொண்டு இருக்கிறார். இவர்கள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளில் தலைமைக்கு நேர்மையாக உழைத்தவர்கள். ஆனால், தேர்தல் நேரத்தில் இவர்கள் சொன்ன எதையும் கேட்காமல் தன்னிச்சையாகச் சுயநலத்தோடு முடிவு எடுத்ததால்தான் தற்போது இந்த நிலை
தே.மு.தி.க-வுக்கு வந்திருக்கிறது. கடந்த தேர்தலில் இவர் எடுத்த முடிவினால் விஜயகாந்தும், அவரது குடும்பமும் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்திருக்கின்றனர். அதனால் கட்சியைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.’’

‘‘தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததற்கு தே.மு.தி.க-தான் காரணம் என்று சொல்கிறீர்களா?’’

‘‘ஆமாம். மக்கள் அனைவரும் ஆட்சிமாற்றம் வேண்டும் என்கிற முடிவில் இருந்தபோது, அதை மாற்றியவர் விஜயகாந்த். கிளை நிர்வாகிகள் மாவட்ட, மாநில நிர்வாகிகள் வரை யாருமே இதை ஏற்கவில்லை. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க-வோடு கூட்டணி வேண்டும் என்று சொன்னபோது அதைச் சரி என்று ஏற்றுக்கொண்டவர், அடுத்த நாள் அதை வேண்டாம் என்று சொன்னதற்குக் காரணம், பிரேமலதாதான். அவரின் சுயநலத்தின் காரணமாகவே விஜயகாந்த் இந்த முடிவை மாற்றினார்.’’

‘‘தே.மு.தி.க அறக்கட்டளையில் முறைகேடு என்று புகார் எழுப்பி இருக்கிறீர்களே?’’

‘‘தே.மு.தி.க பெயரில் இயங்கிவரும் அறக்கட்டளையில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்ட மூவர் மட்டுமே டிரஸ்டிகளாக இருக்கிறார்கள். அதில் நடந்திருக்கும் பரிமாற்றம் எங்கள் யாருக்குமே தெரியாது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் மாநிலம் முழுக்க இருக்கும்
தே.மு.தி.க நிர்வாகிகளுக்கு ஒரு கடிதம் போய் இருக்கிறது. அதில் விஜயகாந்த் செய்த குளறுபடிகள், தவறுகள் எல்லாம் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன. அதில்தான் அறக்கட்டளை தொடர்பான புகாரும் இருந்தது. எனக்கும் அந்தக் கடிதம் வந்தது. அதைவைத்தது விசாரித்தபோதுதான், அறக்கட்டளையில் செய்திருக்கும் முறைகேடுகள் எங்களுக்குத் தெரிந்தது. கட்சிக்காக வசூலித்த பணம், பல கோடி ரூபாய் நன்கொடை எல்லா வற்றையும் தே.மு.தி.க அறக்கட்டளை என்கிற பெயரில் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், அதில் எங்கள் யாரையும் நிர்வாகிகளாக நியமிக்க வில்லை. தனிநபர் அறக்கட்டளை என்றால், அதை ஏன் கட்சி பெயரில் நடத்த வேண்டும்? முதலில் தே.மு.தி.க தனிநபர் அறக்கட்டளையா அல்லது கட்சிக்கான அறக்கட்டளையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்.’’

‘‘உங்கள் உயிருக்கு விஜயகாந்த் மூலம் ஆபத்து என்று குறிப்பிட்டு இருக்கிறீர்களே?’’

‘‘நான் செல்லும் இடங்களில் எல்லாம் சிலர் பிரச்னை செய்து வருகிறார்கள். முதலில் இதை நான் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், சமீபத்தில் நடந்த தே.மு.தி.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், ‘சந்திரகுமார் கட்சியை அழிக்கப்பார்க்கிறார். அவர் எங்கு கூட்டம் நடத்தினாலும் அங்கு பிரச்னை செய்யுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். உண்மையில் கட்சியை அழித்துக் கொண்டிருப்பவர் விஜயகாந்த்தான்.’’

- மா.அ.மோகன் பிரபாகரன்