Published:Updated:

'ஒரு மருத்துவராகச் சொல்கிறேன்'- நியூட்ரினோ குறித்து தமிழிசையின் அடடே விளக்கம்

'ஒரு மருத்துவராகச் சொல்கிறேன்'- நியூட்ரினோ குறித்து தமிழிசையின் அடடே விளக்கம்

கர்நாடக தேர்தலில் பா.ஜ.க., வெற்றி பெற்றால் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஊட்டியில் பேட்டியளித்துள்ளார் .

'ஒரு மருத்துவராகச் சொல்கிறேன்'- நியூட்ரினோ குறித்து தமிழிசையின் அடடே விளக்கம்

கர்நாடக தேர்தலில் பா.ஜ.க., வெற்றி பெற்றால் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஊட்டியில் பேட்டியளித்துள்ளார் .

Published:Updated:
'ஒரு மருத்துவராகச் சொல்கிறேன்'- நியூட்ரினோ குறித்து தமிழிசையின் அடடே விளக்கம்

நியூட்ரினோ குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நிருபர்களிடம் பேசுகையில், ''தமிழகத்தைத் தலைநிமிரவைக்கும் பல திட்டங்கள் உள்ளன. தொடர்ந்து, தமிழகத்தைத் தலைகுனிய வைக்கப் பல கட்சிகள் முயற்சித்துவருகின்றன. இதில் பிரதானமாக இருப்பது காவிரிப் பிரச்னை. 50 ஆண்டுகளாக காவிரி உரிமையை நாம் இழந்திருக்கிறோம். 1974ல் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க சுயநலத்திற்காக அதைப் புதுப்பிக்காமல், நியாயமாகப் போராடிய விவசாயிகளின் வழக்குகளும் வாபஸ் வாங்கப்பட்டன. அதேபோல, கம்யூனிஸ்ட்டுகளும் கடமையிலிருந்து தவறினார்கள். கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தி.மு.க-வால் 50 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட காவிரி, பா.ஜ.க ஆட்சியில் 5 வாரங்களில் வர உள்ளது. தமிழகமே காவிரி நீரை எதிர்பார்த்துவரும் நிலையில், 'மேகதாதுவில் அணை கட்டுவேன்; 6,000 கோடி ஒதுக்கியுள்ளேன்' என்கிறார்  சித்தராமையா. இதை ஏன் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் எதிர்க்கவில்லை.

சித்தராமையா தான் காவிரிப் பிரச்னையில் தீர்வு ஏற்படக் கூடாது என்பதில் குறியாக உள்ளார்.  நேற்று, முதல்வர் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். அதில், தி.மு.க எப்படி தமிழகத்துக்குத் துரோகம் செய்தது என்பதையும், அவர்களின் பொய் முகத்தையும் வெளிச்சமிட்டுக்காட்டினார். 50 ஆண்டுகளாக தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் தொலைத்த காவிரி உரிமையைத் தமிழகத்துக்கு 5 வாரத்துக்குள் பெற்றுத்தருவதற்கு பா.ஜ.க நிச்சயமாக முயலும். இது, தமிழக மக்களின் உரிமை என்பதைப் புரிந்துவைத்துள்ளோம். போராட்டம் நடத்துவது, யாத்திரை நடத்துவதெல்லாம் பொதுமக்களை ஏமாற்றும் செயல்; தமிழ்நாட்டில் காவிரி வராது என்ற தோற்றத்தை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஏற்படுத்திவருகின்றன. காவிரி வழிகாட்டுக் குழு அமைக்கப்பட்டு, சட்டரீதியாக இதற்குத் தீர்வு இருக்கிறது. வரும் 9-ம் தேதி, உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. அத்துடன் தீர்ப்பும் வருகிறது. இல்லை, ஸ்கீம் தான் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பு வரும் பட்சத்தில், அதை அமைத்துவிட்டுப் போவோம்.

நாரிமன் என்ற சட்ட வல்லுநரை வைத்து மட்டுமே கர்நாடகா தனது காய்களை நகர்த்திவருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மேற்படும்போது, சட்ட வல்லுநர்களை மாற்றி, காவிரிப் பிரச்னையில் அக்கறை இல்லாமல் இருந்தனர். தமிழகம் காவிரிப் பிரச்னையை முறையாக அணுகாததும் காவிரி மேலாண்மை வாரியம் அமையாததற்குக் காரணம்.  கர்நாடகாவில் தேர்தல் நடப்பதற்கு முன்னதாகவே சட்ட விதிகளுக்குட்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். ஒரு வேளை, தேர்தல் முடிந்து பா.ஜ.க ஆட்சி அமைந்தால் உடனடியாக அமையும். ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி வழங்கியது  காங்கிரஸ். பங்குகளை வைத்துள்ளது தி.மு.க. நிலம் ஒதுக்கியது அ.தி.மு.க. இதில், பா.ஜ.க-வின் பங்கு இல்லை. விரிவாக்கத்தில் மக்கள் எதிர்ப்பு இருந்தால், உண்மையான சுற்றுச்சூழலை அனுமானித்து அரசு முடிவெடுக்க வேண்டும்.

அதேபோல, ஒரு மருத்துவராகச் சொல்கிறேன், நியூட்ரினோ இந்த நாட்டு மக்களுக்குத் தேவையானது. ஒளி மாதிரியானது அது. உலக நாடுகளில், நியூட்ரினோ கிடைக்காமல் செயற்கை நியூட்ரினோவை உற்பத்திசெய்துவருகிறார்கள். ஆனால், நமது நாட்டில் இயற்கையாகக் கிடைக்கிறது. இது விண்வெளி ஆராய்ச்சியில், இயற்கைச் சீற்றம் குறித்தும், தீவிரவாதிகள் தாக்குதல் இருக்கிறதா உள்ளிட்டவற்றைக் கண்டறிய நியூட்ரினோ பயன்படும். குஜராத்தில் 4 நியூட்ரினோ கிடங்குகள் செயல்பட்டுவருகின்றன. 240 ரூபாய் கேஸ் விலை குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர மத்திய அரசு முயன்றுவருகிறது. இதற்கு, மாநில அரசுகளின் ஒப்புதல் தேவை. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கின்றன. விரைவில், ஜி.எஸ்.டி-க்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படும். பிறகு, அவற்றின் விலையும் குறையும்'' என்று கூறினார்.