Published:Updated:

தங்கம் வாங்குவது இனி கனவுதானா?

தங்கம் வாங்குவது இனி கனவுதானா?
தங்கம் வாங்குவது இனி கனவுதானா?

இறக்குமதி வரி உயர்வால் தங்கம் வாங்குவது பகல் கனவாகிவிடுமோ என்று புலம்பத்  தொடங்கிவிட்டனர் நடுத்தர வர்க்க மக்கள்.

மத்திய அரசு நேற்று தங்கம் மீதான இறக்குமதி வரியை 2 சதவிகிதம் உயர்த்தி 6% ஆக  அதிகரித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்ததால் தங்கத்தின் விலையும் உடனே  அதிகரிக்க தொடங்கி விட்டது. சென்னையில் பவுனுக்கு 385 ரூபாய் அதிகரித்துள்ளது.  

தங்கம் வாங்குவது இனி கனவுதானா?

இறக்குமதி வரி உயர்வு குறித்து கருத்து தெரிவித்த பொருளாதார விவகாரத் துறை  செயலாளர் அரவிந்த் மாயாராம், ''இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதால் தங்கம்  இறக்குமதி கணிசமாக குறையும்.''என்றார்.

தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தவே இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தி  இருக்கிறது.

##~~##
சர்வ தேச அளவில் இந்தியாவில்தான் தங்க நகை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. நம் தங்கத் தேவையில் பெருமளவு இறக்குமதி மூலம்தான் நடக்கிறது. தங்க  இறக்குமதிக்காக கடந்த 2011-2012-ம் நிதி ஆண்டில் இந்தியா சுமார் ரூ.3,10,750  கோடியை செலவிட்டு உள்ளது. இதனால், அதிக அந்நியச் செலாவணியை நம் நாட்டை  விட்டு வெளியேறி இருக்கிறது. இதை குறைக்கவே இறக்குமதி வரி  அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் உள்நாட்டில் தங்கத்தின் விலை அதிகரிக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது.பொதுவாக மத்திய தர வர்த்தகத்தினர், திருமணம் போன்ற சுப  காரியங்களுக்காக தங்க நகைகளை வாங்குகிறார்கள் என்றாலும்,  அதை ஒரு முதலீடாக  கருதியே, சிறு சிறுக சேமிக்கும் பணத்தில் அவ்வப்போது நகைகள் வாங்குகின்றனர்.
ஆனால் தொடர்ந்து ஏறிக்கொண்டிருக்கும் இந்த விலை உயர்வால், தங்கம் வாங்குவது  என்பது கனவாகவே ஆகிவிடுமோ? என்ற புலம்பல் நடுத்தர வர்க்க மக்களிடம் அதிகம்  கேட்கத் தொடங்கிவிட்டது.
-  சி.சரவணன்