Published:Updated:

காஷ்மீர்: பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா!

காஷ்மீர்: பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா!
காஷ்மீர்: பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா!
காஷ்மீர்: பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா!

புதுடெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான்  கோருவதை ஏற்க முடியாது என்று இந்திய வெளியவுறவுத்துறை அமைச்சர் சல்மான்  குர்ஷித் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த   அவர், சுமூகமான சூழ்நிலை உருவானால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை  நடத்தப்படும் என்றும், அனைத்து வகையிலும் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா  போராடும் என்றும் தெரிவித்தார்.

##~~##
மேலும், எல்லை விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்கப் போவதில்லை  என்றும், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்  என்றும் அவர் கூறினார்.