Published:Updated:

குழந்தை இல்ல பணியாளர்களுக்கு 166 குடியிருப்புகள்: ஜெயலலிதா உத்தரவு!

குழந்தை இல்ல பணியாளர்களுக்கு 166 குடியிருப்புகள்: ஜெயலலிதா உத்தரவு!
குழந்தை இல்ல பணியாளர்களுக்கு 166 குடியிருப்புகள்: ஜெயலலிதா உத்தரவு!
குழந்தை இல்ல பணியாளர்களுக்கு 166 குடியிருப்புகள்: ஜெயலலிதா உத்தரவு!

சென்னை:  சென்னை உள்பட 9 இடங்களில் குழந்தை இல்ல பணியாளர்களுக்கு 166 குடியிருப்புகள் கட்ட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்," குழந்தை நலம் மற்றும் பாதுகாப்பு பணியில் முழு நேரமும் பணியமர்த்தப்பட்டுள்ள பல்வேறு குழந்தை இல்லங்களில் பணிபுரியும் அலுவலர்களின் தற்போதைய குடியிருப்பு கட்டடங்கள் மிகவும் சிதிலமடைந்து மற்றும் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளதால், அவற்றை இடித்து புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் சென்னையிலுள்ள இரண்டு குழந்தை இல்லங்கள், ராணிப்பேட்டை, மல்லிபுதூர், தட்டப்பாரை, பஞ்சப்பள்ளி, தஞ்சாவூர், கடலூரிலுள்ள கூர்நோக்கு இல்லம் மற்றும் செங்கல்பட்டிலுள்ள அரசினர் சிறப்பு இல்லம் ஆகிய 9 இடங்களிலுள்ள பணியாளர் குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

##~~##
அந்த வகையில் சென்னையில் இரண்டு இடங்களில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 39 குடியிருப்புகளும், ராணிப்பேட்டையில் 2 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 24 குடியிருப்புகளும், மல்லி புதூரில் 1 கோடியே 73 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 18 குடியிருப்புகளும், தட்டப்பாரையில் 1 கோடியே 95 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 21 குடியிருப்புகளும்,
பஞ்சப்பள்ளியில் 1 கோடியே 63 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 17 குடியிருப்புகளும், தஞ்சாவூரில் 2 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 21 குடியிருப்புகளும், செங்கல்பட்டில் 1 கோடியே 90 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 20 குடியிருப்புகளும், கடலூரில் 54 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 6 குடியிருப்புகளும் என 166 பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கும், அதற்காக 15 கோடியே 61 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.