Published:Updated:

வருமானவரித் துறையினருக்கு கட்கரி மிரட்டல்!

Vikatan Correspondent
வருமானவரித் துறையினருக்கு கட்கரி மிரட்டல்!
வருமானவரித் துறையினருக்கு கட்கரி மிரட்டல்!
வருமானவரித் துறையினருக்கு கட்கரி மிரட்டல்!

புதுடெல்லி: பா.ஜ.க. ஆட்சிக்குவந்தால் எங்கே செல்வீர்கள் என்று வருமான வரித்துறையினரை மிரட்டும் வகையில் பேசியுள்ளார் பா.ஜ.க. முன்னாள் தலைவர் நிதின் கட்கரி.

நாக்பூரில் தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில் இந்த மிரட்டலை வெளியிட்டுள்ளார் கட்கரி.

'காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேறும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது

##~~##
என்பதை வருமான வரித்துறையினர் உணர வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சியைவிட்டு வெளியேறும்போது சோனியாவோ, ப.சிதம்பரமோ காப்பாற்றமாட்டார்கள்'' என்று அவர் கூறியுள்ளார்.
வருமான வரித்துறையினர் நிதின் கட்கரிக்கு சொந்தமான நிறுவனத்தின் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து விலகும்படி நிதின்கட்கரிக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது.

பா.ஜ.க.வின் புதிய தலைவராக ராஜ்நாத் சிங் பதவி ஏற்றார். இந்த நிலையில் வருமான வரித்துறையினரை மிரட்டும் தெனியில் கட்கரி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.