Published:Updated:

கடலூரில் பாமக-அதிமுக மோதல்: போலீஸ் தடியடியால் பதற்றம்!

Vikatan Correspondent
கடலூரில் பாமக-அதிமுக மோதல்: போலீஸ் தடியடியால் பதற்றம்!
கடலூரில் பாமக-அதிமுக மோதல்: போலீஸ் தடியடியால் பதற்றம்!

கடலூர்: கடலூரில் பாமகவினருக்கும், அதிமுக தொழிற்சங்க பேரவையினருக்கும்  இடையே இன்று மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

கடலூரில் பாமக-அதிமுக மோதல்: போலீஸ் தடியடியால் பதற்றம்!

கடலூரில் நுழைய ராமதாசுக்கு தடை விதித்ததை எதிர்த்து ஆட்சியர் அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பாமகவினர் முயற்சித்தனர்.அப்போது அவர்களை  போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து பாமகவினர்- போலீசாரிடையே மோதல்  ஏற்பட்டது.

இதனை தடுக்க போலீசார் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினர் மீது  லேசான தடியடி நடத்தினர்.

கடலூரில் பாமக-அதிமுக மோதல்: போலீஸ் தடியடியால் பதற்றம்!

பாமகவினர் - போலீஸ் மோதலில், அருகில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த அதிமுக தொழிற்சங்க பேரவையினர் மீதும் தாக்குதல் நடந்தது. தாக்குதலை தொடர்ந்து  பாமகவினர் மீது, அதிமுக தொழிற்சங்க பேரவையினரும் தாக்குதல் நடத்தியதால்  பதற்றம் மேலும் அதிகரித்தது.

தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

படம்: பூபாலன்