Published:Updated:

ராமதாஸுக்கு கடலூரில் நுழைய விதிக்கப்பட்ட தடை விலக்கல்!

Vikatan Correspondent
ராமதாஸுக்கு கடலூரில் நுழைய விதிக்கப்பட்ட தடை விலக்கல்!
ராமதாஸுக்கு கடலூரில் நுழைய விதிக்கப்பட்ட தடை விலக்கல்!
ராமதாஸுக்கு கடலூரில் நுழைய விதிக்கப்பட்ட தடை விலக்கல்!

சென்னை: கடலூர் மாவட்டத்தில் ராமதாஸ் நுழைய விதிக்கப்பட்ட தடை  விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு பகுதிகளில் அனைத்து சமுதாய ஆலோசனை   கூட்டம் நடத்தி வருகிறார். வடலூரில் கடந்தவாரம் அனைத்து சமுதாய ஆலோசனை  கூட்டம்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி பாமக   எம்.எல்.ஏ. குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து மாவட்ட   ஆட்சியர் கிர்லோஷ்குமாரும் உத்தரவிட்டிருந்தார்.
 
இந்த தடை உத்தரவு 21.1.2013 முதல் 20.3.2013 வரையிலான காலத்துக்கு அமலில்   இருக்கும் என்று அவர் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் ராமதாசுக்கு தடை விதித்ததை எதிர்த்து ஆட்சியர் அலுவலகத்தை   முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பாமகவினர் முயற்சித்தனர்.அப்போது அவர்களை   போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து பாமகவினர்- போலீசாரிடையே மோதல்   ஏற்பட்டது.

ராமதாஸுக்கு கடலூரில் நுழைய விதிக்கப்பட்ட தடை விலக்கல்!

இதனை தடுக்க போலீசார் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினர் மீது   லேசான தடியடி நடத்தியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ராமதாஸ் நுழைய விதிக்கப்பட்ட தடை  விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட  ஆட்சியர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார்.