Published:Updated:

'டேம் 999' படத்திற்கான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

விகடன் விமர்சனக்குழு
'டேம் 999' படத்திற்கான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
'டேம் 999' படத்திற்கான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
'டேம் 999' படத்திற்கான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி: 'டேம் 999' படத்தை தமிழ்நாட்டில் திரையிட விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ்நாடு-கேரளா இடையே உள்ள முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட'டேம் 999' என்ற திரைப்படம்,கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி இந்த படம் வெளியிடப்படுவதாக இருந்தது.

அணை உடைந்து வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுவது போல இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.இந்த படத்தை திரையிட்டால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி இந்த படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்தது.

இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து, இந்த படத்தின் தயாரிப்பாளரும்,இயக்குனருமான சோகன் ராய், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

##~~##
அதில்,இந்த திரைப்படம் தமிழ்நாடு தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் திரையிடப்பட்டுள்ளதாகவும்,எனவே தமிழ்நாட்டில் திரையிட விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்,"ஒரு மாநிலத்தின் அச்ச உணர்வுகளை தவிர்த்துவிட்டு தனி நபரின் உரிமைகளை கோர்ட்டு கருத்தில் கொள்ள முடியாது. மாநிலத்தின் அதிருப்தியை பார்க்காமல் நாங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. இந்த வழக்கு முற்றிலும் சட்டம் சார்ந்தது. மக்களின் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும்? என்று கூறி தடையை நீக்க மறுத்துவிட்டது.