Published:Updated:

அழகிரி மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு: மத்திய உரத்துறை அமைச்சகம் மறுப்பு!

விகடன் விமர்சனக்குழு
அழகிரி மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு: மத்திய உரத்துறை அமைச்சகம் மறுப்பு!
அழகிரி மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு: மத்திய உரத்துறை அமைச்சகம் மறுப்பு!
அழகிரி மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு: மத்திய உரத்துறை அமைச்சகம் மறுப்பு!

புதுடெல்லி: உரத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக அரசுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று மத்திய உரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"
மத்திய உரத் துறை அமைச்சகத்தின் மூலம் அளிக்கப்படும் மானியங்கள் சரியான முறையில் விவசாயிகளை சென்றடைய உரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சர்வதேச விலை, விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு உரத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மானியம் மற்றும் உர விலை போன்ற உரத்துறை எடுக்கும் அனைத்து முடிவுகளும் வெளிப்படையாகவே நடைபெறுகிறது.

##~~##
உர நிறுவனங்கள் முறைகேடாக வருமானம் பெற அனுமதிப்பதில்லை. உர நிறுவனங்களின் வரவு செலவு பதிவேடுகளை யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். உர விற்பனை தொடர்பான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக 1,000 கோடி ரூபாய் வரையிலான இழப்பை அரசுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படுத்தியுள்ள மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரியை, அமைச்சரவையிலிருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.