Published:Updated:

கூடங்குளம்: மக்கள் கருத்தை அரசு ஏற்க தேமுதிக தீர்மானம்!

விகடன் விமர்சனக்குழு
கூடங்குளம்: மக்கள் கருத்தை அரசு ஏற்க தேமுதிக தீர்மானம்!
கூடங்குளம்: மக்கள் கருத்தை அரசு ஏற்க தேமுதிக தீர்மானம்!
கூடங்குளம்: மக்கள் கருத்தை அரசு ஏற்க தேமுதிக தீர்மானம்!

சென்னை: கூடங்குளம் அணு உலை பிரச்னையில் மக்கள் கருத்தை மத்திய மாநில  அரசுகள் ஏற்க வேண்டும் என்று தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேமுதிகவின் 8 ஆவது தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை  வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூடியது.  கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். அவைத்தலைவர் பண்ருட்டி  ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

##~~##
பொதுக்குழுவில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, இளைஞர் அணித்தலைவர்  எல்.கே.சுதீஷ், கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் உள்பட செயற்குழு, பொதுக்குழு  மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என்று சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர்.
கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார், பொதுக்குழு தீர்மானங்களை வாசித்தார்.
கூடங்குளம் அணு உலை பிரச்னையில் மக்கள் கருத்தை மத்திய மாநில அரசுகள் ஏற்க  வேண்டும் என்பது உட்பட் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மீனவர் பிரச்னை, விலைவாசி பிரச்னை, ரயில் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு,  முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட பிரச்னைகள் தீர்மானங்களில் முக்கியமாக  இடம்பெற்றுள்ளன.