Published:Updated:

பாடகி எஸ். ஜானகி, ராகுல் டிராவிட், மேரி கோம், ஸ்ரீதேவிக்கு பத்ம விருதுகள்!

புதுடெல்லி: திரைப்பட பின்னணி பாடகி எஸ். ஜானகி, ஒலிம்பிக் போட்டியில்

பாடகி எஸ். ஜானகி, ராகுல் டிராவிட், மேரி கோம், ஸ்ரீதேவிக்கு பத்ம விருதுகள்!

வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை  மேரி கோமுக்கு  பத்ம பூஷண் விருதும், நடிகை  ஸ்ரீதேவிக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 4 பதம விபூஷண், 24 பத்ம பூஷண், 80 பத்மஸ்ரீ விருதுகள் உட்பட 108 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 24 பேர் பெண்களாவர்.

பத்ம விபூஷன் 

ஒடிசாவைச் சேர்ந்த சிற்பி ரகுநாத் மொகாபாத்ரா, டெல்லியைச் சேர்ந்த ஓவியர் எஸ்.ஹைதர் ரசா கலைத்துறைக்கான பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்படுகின்றன. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் யாஷ் பால், கர்நாடகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரோட்டம் நரசிம்மா ஆகியோர்  அறிவியல் மற்றும் பொறியியல் துறைக்கான பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பத்ம பூஷண்

மேலும் திரைப்பட பின்னணி பாடகி எஸ். ஜானகி,  ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை  மேரி கோம், விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை, நடனக் கலைஞர் சரோஜா வைத்தியநாதன், சினிமா தயாரிப்பாளர் ராமநாயுடு,.மறைந்த நடிகர் ராஜேஷ் கன்னா மற்றும் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு  பெற்ற ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பத்ம பூஷண் விருது பெறுவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

பத்மஸ்ரீ விருதுகள் 

 தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் டி.வி.தேவராஜன் சமூக சேவைக்காக ஈரோடு தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானந்தத்,  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், விஜயகுமார்
கோவை தொழிலதிபர் ராஜ்ஸ்ரீ பதி மற்றும் திரைப்பட நடிகை ஸ்ரீதேவி, நடிகர் நானா படேகர் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ  விருதுகள் பெறுவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.