
சென்னை: மத்திய ஆட்சி மொழி ஆவதற்கான அனைத்து தகுதிகளும் தமிழுக்கு உண்டு என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் நேற்று இரவு நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர்,"ஹிந்தி படிக்காவிட்டால் வேலை கிடைக்காது என்று சொல்கிறார்கள்.ஹிந்தியைப் படித்தவர்கள் எல்லாம் வேலைவாய்ப்பு பெற்றுவிடுவார்களா,இல்லை.ஹிந்தியைப் படித்துவிட்டு வடநாட்டினர் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்.
ஹிந்தி படிப்பதால் வேலை கிடைக்கிறதா என்பதல்ல முக்கியம்.ஹிந்தி படிப்பதால் நமது தாய்மொழியான தமிழ்மொழி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படும், ஆட்சிமொழியாகாது.
இத்தனை மொழிகள் உள்ள இந்திய நாட்டில் 16 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியுமா,அது எப்படி முடியும் என்று கேட்பார்கள்.எல்லா மொழிகளுக்கும் ஆட்சிமொழியாகும் தகுதி உண்டு.அப்படி மற்ற மொழிகளால் முடியாவிட்டால் இலக்கண வளம்,இலக்கிய வளம்,கவிதை வளம் என இத்தனை வளமும் பெற்ற எங்கள் தமிழுக்கு ஆட்சிமொழியாகும் தகுதி உண்டு.
தங்கள் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்று ஒவ்வொரு மாநில மக்களும் ஆசைப்படலாம்.அது நடைமுறையில் முடியாது என்றால், எந்த மொழியெல்லாம் ஆக முடியுமோ அதை ஆட்சி மொழியாக்குங்கள். அப்படி சலித்து, சலித்துப் பார்த்தால் தமிழால் ஆட்சி மொழியாக முடியும். ஆகவே, தமிழை ஆட்சி மொழியாக்குங்கள்.இதை திருச்சியிலே நடைபெற்ற திமுக மாநாட்டில் அண்ணாவும் வலியுறுத்தியுள்ளார்.
##~~## |
