Published:Updated:

ராகுல் இமேஜ் சோபிக்கவில்லையா?

ராகுல் இமேஜ் சோபிக்கவில்லையா?

##~##

பீகார் சட்டசபைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமாரின் ராட்சத அலை யில், லாலு மற்றும் பாஸ்வானுடன் சேர்த்து கிங் மேக்கர் கனவில் இருந்த காங்கிரஸு ம் 'அம்போ’ என்று மூழ்கிவிட்டது! 

கடந்த அக்டோபர் 10-ல் தொடங்கி நவம்பர் 20 வரை பீகார் சட்டசபையின் 243 தொகுதிகளுக்கு ஆறு கட்டங் களாக வாக்குப் பதிவுகள் நடந்தன. இந்தத் தேர்தலில் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமார் தலைமையில், பி.ஜே.பி-யும் களத்தில் இருந்தது. ராஷ்டிரிய ஜனதா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ராகுல் இமேஜ் சோபிக்கவில்லையா?

தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவும், லோக் ஜன சக்தியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானும் ஒன்றாக நின்றனர். காங் கிரஸ் தனித்துப் போட்டியிட்டது.

கடந்த 24-ம் தேதி நடந்த தேர்தல் முடிவில், 206 தொகுதிகளில் நிதீஷ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. முதன் முறையாக பி.ஜே.பி. எதிர்பாராத வகையில் 102 தொகுதிகளில் போட்டியிட்டு 91 தொகுதி களில் வென்று உள்ளது.

''பீகாரில் அசைக்க முடியாத ராஜாவாக இருந்தவர் லாலு பிரசாத். தனக்குக்  கிடைத்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தாமல் தன் குடும்பத்தை மட்டும் வளர்த்து வந்தார் லாலு. அவரிடம் இருந்து பிரிந்த நிதீஷ் குமார் ஆட்சியைப் பிடித்தார். இது வரை பீகார் மக்களுக்குக் கிடைக்காமல் இருந்த வளர்ச்சியை கடந்த ஐந்து வருடங்களில் நிதீஷ் முதன் முறையாகக் கொடுத்தார். இதுதான் அவரது வெற்றிக்குக் காரணம்!'' என்று ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளரும், எம்.பி-யுமான சிவானந்த் திவாரி சொல்கிறார்.

லாலுவின் மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதி களிலும் தோற்றுப்போனார். லாலுவின் தோல்வியைவிட காங்கிரஸின் படுதோல்விதான் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது.  243 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸுக்குக் கிடைத்தது நான்கே தொகுதிகள்தான். 19 பிரசாரக் கூட்டங்களில் பேசி, பெரிதாக எதிர்பார்க்கப் பட்ட ராகுலின் மேஜிக் சோபிக்கவே இல்லை.

ராகுல் இமேஜ் சோபிக்கவில்லையா?

பெயர் கூற விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவர், ''ராகுலுக்கு வந்த இளைஞர் கூட்டம் ஓட்டு வங்கி யாக மாறாது என்பதற்கு பெரிய உதாரணம் இந்த முடிவு. பீகார் மக்களோடு அந்நியோன்யமாக ராகுல் பழகவில்லை. டெல்லியில் இருந்து சுற்றுலா வந்ததுபோல் ராகுல், சோனியா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் இங்கே வந்து சென்றனர். இந்தி மொழி மண்ணிலேயே காங்கிரஸின் நிலைமை இப்படி என்றால், இன்னும் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸால் என்ன செய்ய முடியும்?'' என்று ஆதங்கப்பட்டார்.  

அரசியலில் பல புதிய கோணங்களை உருவாக்கிவிட்ட பீகார் தேர்தலின் முடிவுகளில் முக்கியமானது, வாஜ்பாய்க்குப் பின் தேசிய முன்னணிக்குக் கிடைத்த புதிய தலைவராக நிதீஷ் குமார் கருதப்படுகிறார் என்கிற உண்மை!  

படங்கள்: அப்தாஃப் ஆலம் சித