Published:Updated:

மிஸ்டர் கழுகு : கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்!

மிஸ்டர் கழுகு : கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு : கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்!

மிஸ்டர் கழுகு : கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்!

மிஸ்டர் கழுகு : கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்!

மிஸ்டர் கழுகு : கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்!

Published:Updated:
மிஸ்டர் கழுகு : கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு : கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்!
மிஸ்டர் கழுகு : கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்!

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கழுகார் வந்தார்.

‘‘சட்டசபை நடவடிக்கைகளா... கோட்டை நிர்வாகமா? எதைப் பார்க்கப் போனீர்?” என்று கேட்டோம் கழுகாரை.

‘‘சட்டசபை வட்டாரத்தில்தான் உமது நிருரைப் பார்த்தேனே. நான் ரவுண்ட் அடித்தது கோட்டைக்குள்!” என்றபடி செய்திகளை அவிழ்க்க ஆரம்பித்தார்.

‘‘முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் சொல்வது அனைத்தும்தான் நடக்கிறது. அவரது கண் அசைவில்தான் அனைத்தும் நகர்கிறது என்று ஐ.ஏ.எஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள். அவரும் வெங்கடரமணனும் ஒரே கோணத்தில் சிந்திப்பவர்கள். கடந்தமுறை முதல்வர் அலுவலகத்தில் ராம மோகன ராவ், ஷீலா ப்ரியா இருவரும் ஒரே கோணத்தில் செயல்பட்டார்கள். ஷீலா ப்ரியா பதவிக்காலம் முடிந்து, போய்விட்டார். ராம மோகன ​ராவை முதல்வர் அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி விட்டார்கள். இருவரும் போன பிறகு, தனிக்காட்டு ராஜ்ஜியம் நடத்துகிறாராம் ஷீலா பாலகிருஷ்ணன்.’’

‘‘முதல்வர் அலுவலகத்தில் இன்னொரு ஷீலா இருந்தாரே?... அவர் என்ன செய்கிறார்?’’

மிஸ்டர் கழுகு : கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்!

‘‘நீர் சொல்வது ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயரையா? தேர்தல் நடப்பதற்கு முன்பு, தமிழக அரசு ஊழியர்கள் திடீரென்று போராட்டம் நடத்தினார்கள். புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, பழைய பென்ஷன் திட்டமே வேண்டும் என்றார்கள். இதுதொடர்பாக ஆராயந்து ரிப்போர்ட் தரும்படி சொல்லி முதல்வர் அப்போதைக்கு ஒரு கமிட்டியைப் போட்டு, அதற்கு சாந்தா ஷீலா நாயரை தலைவராக நியமித்தார். அந்தக் கமிட்டி பிறகு என்ன ஆனது என்பதே அரசு ஊழியர்களுக்குத் தெரியாது. பிறகு என்ன நடந்ததோ? புதிய ஆட்சி வந்தவுடன், ‘சிறப்புப் பணி’ என்கிற பேனரில் முதல்வர் அலுவலகத்துக்கு சாந்தா ஷீலா நாயரை மாற்றினர். அங்கிருந்தபடியே தனது பழைய பணியையும் தொடர்வார் என்றும் சொன்னார்கள். ஆனால், பென்ஷன் திட்டம் தொடர்பாக சாந்தா ஷீலா நாயர் இதுவரை பரிந்துரை எதையும் செய்ததாகத் தெரியவில்லை என்கிறார்கள் தலைமைச் செயலக அரசு ஊழியர்கள்.  உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் பென்ஷன் விவகாரம் மீண்டும் சூட்டைக் கிளப்பலாம்.’’

‘‘ம்!”

‘‘ஷீலா பாலகிருஷ்ணனுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் காட்டில் மழையாம். அரசின் முக்கியமான துறைகளைக் கைவசம் வைத்திருக்கும் ஒரு சிலர் அவர்களது துறைகளைத் தவிர, கூடுதலாகப் பல துறைகளையும் கவனிக்கிறார்கள். இவர்களுக்கு முதல்வர் அலுவலக ஆசி எப்போதும் இருக்கிறதாம். வேறு பல அதிகாரிகளுக்கு நல்ல திறமை, அனுபவம், தகுதிகள் இருந்தும் அவர்களுக்குப் பொறுப்பான அரசுத் துறை செயலாளர் பதவிகளைத் தராமல் வேண்டுமென்றே டம்மியான பதவியில் பொம்மைபோல் உட்கார வைக்கப்பட்டிருக் கிறார்கள். இந்தப் பாரபட்சத்தால், அரசுத் துறைகளில் அன்றாடம் எடுக்கவேண்டிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. சில துறைகளில் கேட்பாரற்றுக் குவியல் குவியலாக ஃபைல்கள் தேங்கிக்கிடக்கிறதாம். மொத்தத்தில் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்து போய்க் கிடப்பதாகத் தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர் மத்தியில் பேச்சு.’’

‘‘பட்ஜெட் நேரமாச்சே! மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்துவருகின்றனவே?”

‘‘முக்கியமான சுமார் 37 அரசுத் துறைச் செயலாளர்கள் பதவிகள் இருக்கின்றன. பொது, நிதிச் செலவினம், தொழில், போக்குவரத்து, உயர்கல்வி, எரிசக்தி, சுற்றுலா மற்றும் இந்து அறநிலையத் துறை, கால்நடைத் துறை என மிக முக்கியமான துறைகளின் பதவி இடங்கள் காலியாக இருக்கின்றன. மற்ற அதிகாரிகள் சேர்த்துக் கவனிக்கிறார்​களாம்!”

‘‘இதெல்லாம் முதல்வருக்குத் தெரியுமா?’’

‘‘தலைமைச் செயலகத்தில் செயல்படும் அரசுத் துறைச் செய​லாளர்கள் நிலைமையே இந்தக் கதி. சேப்பாக்கம், எழிலகத்தில் இயங்கும் முக்கியத் துறைகளின் தலைவர்கள் பதவிகளும்கூட காலியாகத்தான் இருப்பதாக அரசு ஊழியர்கள் சொல்கிறார்கள்.’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம். சமூக நலத்துறை, வணிகவரி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிக ஆணையம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் கமிஷனர் பதவிகளைச் சொல்கிறார்கள். அரசு ஊழியர்களின் மனநிலையை மோப்பம் பிடித்து முதல்வருக்குச் சொல்லவேண்டிய பொறுப்பில் இருப்பவர் உளவுத்துறையினர்தான். எதிர்க்  கட்சி அரசியல் தலைவர்களின் டெலிபோனை கண்காணிப்பது போன்ற வேலைகளில் பிஸியாக இருக்கும் அந்தத் துறையினர், எங்கே அரசு ஊழியர்களின் ஆதங்கத்தைக் கேட்கப் போகிறார்கள்?’’ என்றபடி அரசியல் மேட்டர்களுக்கு வந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு : கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்!

‘‘ராமேஸ்வரத்தில் அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மணிகண்டன், ‘கடந்த எம்.பி தேர்தலில் இந்தப் பகுதியில் 800 வாக்குகள் குறைவாகக் கிடைத்தன. சட்டமன்றத் தேர்தலின்போது கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளோம். எனவே, மக்கள் நமக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள். இதில் ஆர்வம் காட்ட வேண்டிய கட்சி நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்துத் தலைமைக்குக் கடிதம் எழுதுவதையே வழக்கமாகக் கொண்டு

உள்​ளீர்கள். என் மீதும் புகார் அனுப்பி​யுள்ளனர். இதையெல்லாம் இத்தோடு நிறுத்திக்​கொண்டு உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காகப் பாடுபடுங்கள்’ என நிர்வாகிகளை எச்சரிக்கும் வகையில் பேசினார்.”

‘‘யாரை மனதில்வைத்துச் சொன்னாராம் அமைச்சர்?”

‘‘யாரைச் சொல்லி இருப்பார்? அன்வர் ராஜாவைத்தான். எம்.பி-யான அன்வர் ராஜாவோ எடுத்த எடுப்பிலேயே, ‘மாவட்டத்தை, அடக்கி ஆளும் அமைச்சர் அவர்களே’ எனப் பேசத் தொடங்கக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட அவர், ‘நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. முன்பெல்லாம் நான் சொன்ன வேலையை உடனே செய்த அதிகாரிகள் இப்போது அப்படிச் செய்வதில்லை. அமைச்சர் சொன்ன​வுடன் செய்து முடித்து விடுகிறார்கள். அதனால்தான் அப்படிச் சொன்னேன்’ என்று பிளேட்டை மாற்றினார். கட்சியில் சீனியரான காரணத்தினால் மாவட்டத்தில் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தி வந்த அன்வர் ராஜாவை ஜூனியரான மணிகண்டன், அமைச்சரான ஓரிரு மாதங்களிலேயே ஓரங்கட்ட வைத்துவிட்டார் எனக் கட்சியினரிடையே பேச்சு உள்ளது. அதுதான் இந்தக் கூட்டத்தில் எதிரொலித்​ததாம்!”

‘‘எல்லா ஊர்களிலும் இந்த மோதல் இருக்கிறது!”

‘‘குமரி மாவட்டத்தில் இருக்கும் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் மீது சில கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.

‘எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் பொறுப்பில்  அவர் இருந்தபோது அ.தி.மு.க-வினரிடம் மாவட்டச் செயலாளர் பதவி வாங்கித் தருகிறேன், மாவட்டப் பொறுப்புகள் வாங்கித் தருகிறேன்  என லட்சக்கணக்கில் பணம் வாங்கினாராம். இவருக்குத் தொடர்ந்து  செலவு செய்த ஒரு ரியல் எஸ்டேட் அதிபருக்கும்  பெரிய பொறுப்பு வாங்கிக் கொடுக்காமல் இழுத்தடித்தாராம். அதுபோலவே இந்தச்  சட்டமன்றத் தேர்தலிலும் சீட் வாங்கித் தருகிறேன் என தமிழகம் முழுவதும் பலரிடம் பல லட்சம் வரை வாங்கியிருக்கிறாராம். கார்டனில் இவருக்குச் செல்வாக்கு உள்ளது என நம்பிப் பணம் கொடுத்தவர்களுக்கு  சீட்டும் கிடைக்கவில்லை. பணமும் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்து உள்ளனர்’ என்று கார்டனுக்கு புகார்கள் போய்க் கொண்டு இருக்கின்றன. விரைவில் இந்தப் பிரச்னை இவருக்குச் சிக்கலை உண்டாக்கும் என்கிறார்கள்.”

‘‘மொழிப்பற்று உள்ள பெயர்கொண்டவரா?”

‘‘ம். தற்போது குமரி அ.தி.மு.க-வினருக்கும்,

தி.மு.க-வினருக்கும் இடையே அரசு விழாக்களில் மோதல் நடந்து வருகிறது. தி.மு.க எம்.எல்.ஏ-க்களை அரசு விழாக்களில் புறக்கணிப்பதால், இந்தப் பிரச்னை கைகலப்பு வரை போகிறது. தி.மு.க

மிஸ்டர் கழுகு : கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்!

எம்.எல்.ஏ-க்கள் அரசு விழாக்களுக்கு வருவது தெரிந்தால், உடனே கலெக்டர் சஜ்ஜின் சிங் சவான் அரசு விழாவைத் தவிர்த்துவிடுகிறார். நடந்த சட்டமன்றத் தேர்தலில் குமரியில் ஆறு தொகுதிகளிலும் அ.தி.மு.க தோற்றதற்கு அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த தளவாய் சுந்தரம், கலெக்டர், அரசு பி.ஆர்.ஓ நவாஸ் கான் ஆகியோர் மீது பழியைப் போட்டுத் தங்களைக் காப்பாற்றிக்கொண்டனர். சில மாதங்களுக்கு முன் 11 அரசு  பி.ஆர்.ஓ-க்கள் மாற்றப்பட்டனர். அதன்பின் 4 பி.ஆர்.ஓ-க்கள் மாற்றப்பட்டனர். அதில் ஒருவர்தான் நவாஸ் கான். இவர், தி.மு.க ஆட்சியில் பதவிக்கு வந்து ஆளும் அ.தி.மு.க-வோடு ஐக்கியமானவர். தேர்தல் நேரத்தில் மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரத்துக்கு விளம்பர விஷயத்தில் வளைந்து கொடுக்காமல், முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் போன்ற ஐந்து அ.தி.மு.க வேட்பாளர்களை ஜெயிக்கவைக்க முயற்சி செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. தளவாய் சுந்தரத்தின் நெருக்கடி மூலம் சென்னைத் தொழிலாளர் துறை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அதற்குப்பின் ஒரு டீம், சர்வே செய்ததில் குமரியில் ஆறு  தொகுதிகளிலும் அ.தி.மு.க தோற்க தளவாய் சுந்தரம்தான் காரணம் என்று தெரிந்தது. சில வாரங்களில் தளவாய் சுந்தரமும் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார். நவாஸ் கான் மாற்றப்பட்ட பின் குமரிக்கு இன்னும் புதிய  பி.ஆர்.ஓ நியமிக்கப்படவில்லை. மீண்டும் நவாஸ் கான் குமரிக்கு பி.ஆர்.ஓ-வாக நியமிக்கப்படலாம் என்கிறார்​கள். குமரியில் ஆளும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இல்லாததாலும், அரசு விழாக்களில் தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் அ.தி.மு.க-வினரும் வந்து வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை போவதாலும், யாரும் குமரிக்கு பி.ஆர்.ஓ-வாக வரத் தயங்குகின்றனராம். கிட்டத்தட்ட இரண்டு மாதம் தாண்டியும் குமரியில் பி.ஆர்.ஓ நியமிக்கப்படவில்லை. இதனால் மக்கள் செய்தித் தொடர்புத் துறையின் செயல்பாடு குமரியில் முடங்கியுள்ளது.”

‘‘அடுத்த செய்தியைச் சொல்லும்!”

‘‘சித்தா மருத்துவக் கல்லூரிகளில் சித்தா மருந்தாளர் என்ற பணியிடம் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள இந்தச் சித்தா மருந்தாளர்கள் 150 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இதுவரை அவர்கள் யாரும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.”

‘‘என்ன காரணம்?”

‘‘அதிகாரி ஒருவர் இதற்காகப் பேரம் பேசுகிறாராம். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருந்தாளர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தலா ஒருவருக்கு ஒரு லட்சம் கேட்கிறாராம். மேலிருந்து இந்தத் தொகை கேட்கப்பட்டுள்ளது. இது எனக்கு மட்டும் இல்லை.அந்தத் தொகையைக் கொடுத்தால்தான், பணி நிரந்தரம் என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். இந்தப் பேரம் படியாததால், அரசாணை பிறப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருந்தாளர்கள் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்று சொல்கின்றனர்” என்றபடி எழுந்த கழுகார்,

‘‘கொஞ்ச காலமாகக் கண் நோயால் அவதிபட்டு வருகிறாராம் விஜயகாந்த். கண்ணில் இருந்து நிற்காமல் நீர் வந்துகொண்டு இருப்பதால், வேறு பாதிப்பு இருக்கிறதா என்ற பரிசீலனை நடக்கிறது. இதனால் தற்போது கேரளாவில் இருந்து வைத்தியர்கள் வந்துள்ளனர்” என்றபடி பறந்தார்.

படங்கள்: சு.குமரேசன், உ.பாண்டி

வெள்ள நிவாரண நிதி  அமைச்சர் வாங்கினாரா?

கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளைத் தமிழக அரசு வழங்கியது. இந்த நிதி உதவிகள் பெரும்பாலும் ஆளும் கட்சியினருக்கே கிடைக்கிறது என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின. அதுபோலவே, 11 ஆண்டுகள் எம்.பி ஆக இருந்த அ.தி.மு.க வி.ஐ.பி ஒருவர், ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரண நிதி வாங்கியுள்ளாராம். அவர் பொறுப்பில் இருக்கும் கூட்டுறவு வங்கியில் வெள்ள நிவாரண செக்கைப் போட்டுப் பணமாக்கி இருக்கிறார். அந்த வி.ஐ.பி, தமிழக அமைச்சராகவும் ஆகிவிட்டார். கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த அந்த அமைச்சருக்கு இறால் பண்ணைகள் என்று பல கோடிக்குச் சொத்துகள் இருக்கும்போது ஏழைகளுக்குச் சேர வேண்டிய பணத்தில் பங்கு போட்டது ஏன் என்று அவரது மானியக் கோரிக்கையின்போது பிரச்னையைக் கிளப்ப தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதாரத்தோடு தயாராக இருக்கிறார்களாம்.

கருணாநிதியின் போட்டோகிராபர்  திடீர் அரெஸ்ட்!

2001-ம் ஆண்டு கருணாநிதி வீட்டுக்குள் புகுந்து தமிழகக் காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். கருணாநிதி வீட்டில் செய்தி சேகரிக்க வந்த ஜெயா டி.வி செய்திக்குழுவினை வீட்டுக்குள்விட மறுத்தார் கருணாநிதியின் போட்டோகிராபர் ராஜேஷ். ராஜேஷுக்கும், ஜெயா டி.வி செய்திக் குழுவுக்கும் கைகலப்பு ஏற்பட, ஜெயா டி.வி செய்தியாளர்கள், ராஜேஷ் மீது புகார் அளித்தனர்.ராஜேஷ் மீது கொலை வழக்குப் பதிவாகி, கடந்த 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக வாய்தாவுக்கு ஆஜர் ஆகாமல் இருந்த ராஜேஷுக்கு நீதிமன்றம் வாரன்ட் பிறப்பிக்க, கடந்த வாரம் ராஜேஷை காவல் துறையினர் கைதுசெய்தனர். ஆறு நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

ஆத்தூரில் பெருமாள் முருகன்!

மிஸ்டர் கழுகு : கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்!

எழுத்தாளரும், பேராசிரியருமான பெருமாள் முருகன் எழுதிய, ‘மாதொருபாகன்’ நூலுக்கு 2015-ம் ஆண்டு கடும் எதிர்ப்புக் கிளம்பிப் போராட்டங்கள் வெடித்தன. பெருமாள் முருகன் மீது வழக்குகளும் பாய்ந்தன. இப்போது அந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். எனவே, நாமக்கல்லில் இருந்து சென்னைக்குப் பணி இட மாறுதலில் வந்திருந்த பெருமாள் முருகனும் அவரது மனைவி எழிலரசியும் கலந்தாய்வு மூலம் சேலம் ஆத்தூர் அரசுக் கல்லூரிக்குப் பணி மாறுதல் ஆகிப் போய்விட்டனர்.

கட்சி மாறும் கண்ணப்பன்?

மிஸ்டர் கழுகு : கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்!

அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் மாற்றுக் கட்சியினரைத் தங்களது கட்சிக்கு இழுக்கும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனைக் கடுப்பேற்றும் வகையில் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கத் தடை போட்டு விட்டதாம் கார்டன் தரப்பு. சட்டமன்றத் தேர்தலில் சீட்டும் தரவில்லை... கட்சிப் பொறுப்பும் தரவில்லை என்று அதிருப்தியில் இருக்கும் அவர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளாராம். விரைவில் வேறு கட்சியில் கண்ணப்பனை பார்க்கலாம் என்​கிறார்கள் அவரது நட்பு வட்டாரங்கள்.

ரூ.25 லட்சம்!

மதுரையில் ஆளும் கட்சி நிர்வாகிகளை அழைத்துத் திடீரென கூட்டம் நடத்தியுள்ளார் அந்த வட்டாரத்து மாண்புமிகு. ‘‘வருகிற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சி கவுன்சிலர்க்கு ரூ.25 லட்சம் வரை தி.மு.க செலவளிக்க உள்ளதாக எனக்குத் தகவல் வந்துள்ளது. அதனால், ரூ.25 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்து, பாஸ்புக்கை நகல் எடுத்து வருபவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்’’ என்று கூறியுள்ளார். இதனால் மதுரை அ.தி.மு.க தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.