Published:Updated:

‘பரபரப்பு' ட்ரம்ப் 'அமைதி' ஹிலாரி!

‘பரபரப்பு' ட்ரம்ப் 'அமைதி' ஹிலாரி!
பிரீமியம் ஸ்டோரி
‘பரபரப்பு' ட்ரம்ப் 'அமைதி' ஹிலாரி!

யார் அமெரிக்க சாய்ஸ்?போட்டி

‘பரபரப்பு' ட்ரம்ப் 'அமைதி' ஹிலாரி!

யார் அமெரிக்க சாய்ஸ்?போட்டி

Published:Updated:
‘பரபரப்பு' ட்ரம்ப் 'அமைதி' ஹிலாரி!
பிரீமியம் ஸ்டோரி
‘பரபரப்பு' ட்ரம்ப் 'அமைதி' ஹிலாரி!
‘பரபரப்பு' ட்ரம்ப் 'அமைதி' ஹிலாரி!

மெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், அனல் இப்போதே ஆரம்பம். ‘உலகமே சுருங்கி விட்டது’ என்று நாம் சொல்வது சும்மா அல்ல... அதனால்தான் நம்மூர் தேர்தல் மாதிரியே அங்கும் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதும் நமக்கு முக்கியம். இதுவரை இருந்த ஒபாமா இனி இல்லை.  அப்படியானால், அடுத்து யார் என்பது நவம்பர் 8-ம் தேதி தெரிந்துபோகும்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் ஆகியோர் இடையே கடும் போட்டி உள்ளது. ‘‘அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக ஆவேன்’’ என ஹிலாரியும், ‘‘சிறந்த அமெரிக்காவை உருவாக்குவேன்’’ என ட்ரம்ப்பும் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய, அதிரடியான கருத்துக்களை ட்ரம்ப் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் ட்ரம்ப்பை, “ஒரு தகுதியற்ற வேட்பாளர்” என அதிபர் ஒபாமா விமர்சிக்க, “அமெரிக்க வரலாற்றில் ஒபாமா ஒரு மோசமான அதிபர்” என ட்ரம்ப் பதிலடி கொடுக்க... நம்ம ஊர் மாதிரியே அங்கும் ரணகளம்.

‘‘ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களை, அமெரிக்காவைவிட்டு ஒட்டுமொத்தமாக வெளியேற்ற வேண்டும்’’ என ஆரம்பித்து, ‘‘சிறந்த அமெரிக்காவை மீண்டும் உருவாக்குவோம்’’ என்பது வரை அதிகாரத் தொனியிலேயே பேசி வருகிறார் என ட்ரம்ப் மீது பல விமர்சனங்கள் வைக்கப் பட்டன. இவர் பேச்சே இவரைத் தோற்கடித்துவிடும் எனப் பலர் நினைத்தபோது, உலக மக்களின் மனநிலை வேறு, தங்களுடைய மனநிலை வேறு என அமெரிக்கர்கள் நிரூபித்தனர். அதனால்தான், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக எந்தவிதச் சிரமமும் இல்லாமல் ட்ரம்ப் அறிவிக்கப்பட்டார். 

‘பரபரப்பு' ட்ரம்ப் 'அமைதி' ஹிலாரி!

ட்ரம்ப்பின் பிரசாரம் அவர்களது ஆதரவாளர்கள் பார்வையில் சரியாகவே தெரிந்துள்ளது. பொருளாதாரக் கொள்கையை விமர்சித்தவர்களுக்கு, ‘‘ஒரு காலத்தில் அமெரிக்காவின் பொருட்களால் உலகம் நிறைந்திருந்தது. இன்று உலகின் பொருட்களால் அமெரிக்கா நிறைந்துள்ளது’’ என அமெரிக்காவின் பொருளாதாரம் - வேலைவாய்ப்பை ஒரே பிரசாரத்தில் காலி செய்கிறார் ட்ரம்ப். இஸ்லாமியரை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று அவர் சமூகத்தில் விதைத்த வெறுப்பை வழிமொழிவதைப்போல அவரது ஆதரவாளர்கள், பயங்கரவாதத்தை ஒடுக்க ட்ரம்பால் மட்டுமே முடியும் என்கின்றனர்.

‘ட்ரம்ப் ஒரு வியாபாரி... அவரை அதிபர் ஆக்கக் கூடாது’ என்று அமெரிக்கர்கள் சொல்கிறார்களோ, இல்லையோ அமெரிக்காவுக்கு வெளியே சொல்கிறார்கள். ‘அமெரிக்கா முதலாளித்துவ நாடு என்ற பிம்பத்தில் இருந்து தன்னை விலக்கிக்கொள்ள விரும்பாது. ட்ரம்ப் போன்ற வியாபாரிகளை அமெரிக்கா தள்ளி வைக்காது’ என்கிறது அங்கு நிலவும் சுழல். இந்த மாதிரி ‘சென்சேஷனல்’ செய்கிறாரே தவிர, மக்கள் பிரச்னை குறித்து ட்ரம்ப் பெரிதாகப் பேசவே இல்லை.  

இன்னொரு பக்கம் ஹிலாரி நிற்கிறார்... ஹிலாரியின் பிரபல்யம் ட்ரம்ப்க்கு சற்று எதிரான விஷயமாக இருக்கிறது.

ஒபாமாவின் 2.0 என்று தன்னைப் பிரதானப்படுத்தி வரும்  ஹிலாரியை அமெரிக்கா தனது முதல் பெண் அதிபராக எதிர்பார்க்கிறது. ஜனநாயகக் கட்சி மாநாட்டில் பேசிய ஒபாமாவின் மனைவி மிச்செல் பேச்சும் ஹிலாரி ஏன் அதிபராக வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.

“இந்தத் தேர்தலில் மட்டுமல்ல, இனிவரும் எல்லாத் தேர்தல்களிலுமே குழந்தைகளின் நலனில் யார் அக்கறை காட்டுகிறார்களோ, அவர்களுக்கே வாக்களிப்போம் என்று முடிவு செய்வோம். இந்த முறை நான் இந்தப் பொறுப்புள்ளவர்களில் ஒருவராக ஒரு நபரைப் பார்க்கிறேன். அமெரிக்க அதிபர் என்ற பெயருக்குப் பொருத்தமானவர் என்று அவரைப் பார்க்கிறேன். அவர்தான் என் தோழி ஹிலாரி கிளின்டன். ஹிலாரியின் செயல்பாடுகள் குறித்து அனைவரும் அறிந்ததே. அவரின்  செயல்பாடுகள் அமெரிக்கக் குழந்தைகளின் வாழ்வில் பெரிய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன. அவர் எட்டு வருடங்களுக்கு முன் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். அதனால் அவர் துவண்டு விடவில்லை... கோபப்படவில்லை. வீட்டுக்குள் முடங்கிவிடவும் இல்லை. ஏனெனில், அவர் மக்களின் ஊழியர். ஒரு பெண்ணை அமெரிக்காவின் அதிபராகப் பார்க்க விரும்புகிறேன்” என்று உணர்ச்சிபொங்கப் பேசியுள்ளார் மிச்செல் ஒபாமா.

‘பரபரப்பு' ட்ரம்ப் 'அமைதி' ஹிலாரி!

ஹிலாரியின் தேர்தல் உரைகள் அனைத்தும் மக்களை மையப்படுத்தியே அமைந்துள்ளது. ஆணுக்கு இணையாகப் பெண்களுக்கு ஊதியம் வழங்குவது, குழந்தைகள் பாதுகாப்பு, நடுத்தரக் குடும்பங்களுக்குக் கூடுதல் வரிவிலக்கை ரத்து செய்வது என அமெரிக்க மக்களின் வாழ்வாதார, பொருளாதாரப் பிரச்னைகளை முன்னிறுத்தி உள்ளார் ஹிலாரி.

மக்களின் மனதில் ஹிலாரி அதிபராக வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருப்பது தெரிகிறது. மக்கள் மனதில் யார் இடம்பெறுகிறார்கள் என்பதைத் தாண்டி, மக்களால் யார் அதிகம் வெறுக்கப்படுகிறார்களோ அவர்கள் தோற்றுப் போவார்கள் என்பது ஹிலாரி, ட்ரம்ப் ஆகிய இருவருக்குமே நன்றாகத் தெரியும். அமெரிக்க தேர்தலின் ரியல் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது.

- ச.ஸ்ரீராம்

ட்ரம்பை சுற்றும் சாராய சர்ச்சை!

தனது சகோதரர் குடியால் பாதிக்கப்பட்டதால், சிகரெட், ஆல்கஹால் போன்ற விஷயங்களைத் தனது வாழ்நாளில் ட்ரம்ப் பயன்படுத்தியதே இல்லையாம். ஆனால், சமூக வலைதளங்களில் அவர் மதுபானப் பாட்டில்களோடு இருக்கும் படத்தைவைத்து மருத்துவ அறிக்கையை விமர்சித்தது அல்டிமேட் வைரல்.

ட்ரம்ப் கட்சியில் அரசியல் கற்றவர் ஹிலாரி!

ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளின்டன் 1964-ம் ஆண்டு குடியரசுக் கட்சியில்தான் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1968-ம் ஆண்டு ஜனநாயகக் கட்சிக்கு மாறினார். குடியரசுக் கட்சியில் பணியை தொடங்கிய ஹிலாரிதான் இன்று அந்தக் கட்சியின் தலைவலி.