Published:Updated:

சந்தோஷம் வேண்டுமா? - செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்..!

சந்தோஷம் வேண்டுமா? - செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்..!
சந்தோஷம் வேண்டுமா? - செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்..!
சந்தோஷம் வேண்டுமா? - செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்..!

இன்றைய அதி நவீன உலகில் பலர் நிம்மதி இல்லை, சந்தோஷம் இல்லை என்று புலம்புவதை கேட்டிருப்போம். இதற்கு ஒரே தீர்வு செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்வதுதான் என லண்டன் ஸ்கூல் ஆஃப் இக்கனாமிக்ஸ்-ன் பேராசிரியர் பால் டோலான் கருத்து தெரிவித்துள்ளார்.

'' ஸ்மார்ட் போன்கள், பலரை அவர்களின் நண்பர்கள் மற்றும்  உறவினர்களிடமிருந்து விலக்கி வைத்திருக்கிறது. எப்போது பார்த்தாலும் மெசேஜ் பார்ப்பது, இமெயில் பார்ப்பது என்பதில் பலர் பொழுதை

##~~##
கழிக்கிறார்கள். இவர்கள் தங்களின் பழக்கத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால், அவர்களுக்கு மனநிலை பாதிக்கும் சூழ்நிலைக் கூட உருவாகும்" என்ற பேராசிரியர் பால் டோலான்,
'' ஏற்கெனவே அலுவலகம் மற்றும் வீட்டில் இண்டர்நெட் இணைப்பில் இருப்பவர்கள், செல்போனிலும் அதனை மேற்கொள்வது உடல் மற்றும் உள்ளத்தில் ஆபத்தை உருவாக்கும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
எதையும் அளவோடு பயன்படுத்தினால் அளவில்லா நன்மை.. இது செல்போன் பயன்பாட்டுக்கும் 100% பொருந்தும்.
- சேனா