Published:Updated:

திமுகவுக்கு எதிராக சதி செய்பவர்கள் நிலைக்க முடியாது: கருணாநிதி

திமுகவுக்கு எதிராக சதி செய்பவர்கள் நிலைக்க முடியாது: கருணாநிதி
திமுகவுக்கு எதிராக சதி செய்பவர்கள் நிலைக்க முடியாது: கருணாநிதி
திமுகவுக்கு எதிராக சதி செய்பவர்கள் நிலைக்க முடியாது: கருணாநிதி

சென்னை: திமுகவுக்கு எதிராக சதி செய்பவர்கள் நிலைக்க முடியாது என்று திமுக  தலைவர் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  கூறியதாவது:

திமுகவிற்கு எதிரான சில கட்சிக்காரர்களின் எரிச்சலின் வெளிப்பாடாக தீட்டப்பட்ட  சதியின் விளைவாக சென்னை மாநகரில் காணப்படும் சுவரொட்டிகள் பற்றி..?

சென்னை மாநகரில் காணப்படும் சுவரொட்டிகள் பற்றி என்னுடைய  அனுமதியோடும்,  பொதுச் செயலாளர் பேராசிரியரின் ஒப்புதலோடும் நேற்றைய தினம் ஓர் அறிக்கை  தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மாற்றார் பாசறையில் இருந்து  முடுக்கி விடப்பட்டதன் விளைவே இந்தச் சுவரொட்டிகளும், சுவரொட்டி  வாசகங்களுமாகும். இதற்கு என் மகன்கள் யாரும் காரணமாக இருக்க முடியாது என்று  நான் நிச்சயமாக நம்புகிறேன்.

##~~##
வெங்கட் என்றும், ரமணா என்றும் பெயரிட்டு அந்த சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்ற  "மாயமான்கள்'' குறிப்பாக சொல்ல வேண்டுமேயானால் "மாரீச மான்கள்'' சில கழக  முன்னணியினருக்கு தாங்கள்தான் ஆதரவாளர்கள் என்பதாக காட்டிக் கொண்டு, அதன்  மூலம் கழகத்தைப் பிளப்பதற்காக நடத்தப்பட்ட சதியின் தூதுவர்களாக செயல்படுபவர்கள்  யாராயினும் அவர்கள் மூக்கறுபட்டு போய் விடுவார்கள் என்பதை மாத்திரம் கழக உடன்  பிறப்புகளிடம் எனக்குள்ள நம்பிக்கையின் காரணமாக உறுதிபடக் கூறுகிறேன்.

இவ்வாறு சதி செய்பவர்கள் யார் என்று தெரிகிறதா?
இந்தப் பிரச்னையில் அணி சேர்த்து, கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள்  யார்- யார் என்பது இப்போது அவர்களுடைய நாடகங்கள் மூலமாக மறைக்கப்படலாம்.  ஆனால் என் தலைமையில் உள்ள கழகத்திற்கு மட்டுமல்ல; எனக்கும் குழி தோண்ட  எண்ணியவர்கள் நிலைத்து நின்றதுமில்லை; இனி நிலைக்கப் போவது மில்லை. யார்  அவர்கள் என்ற முழு உண்மை முகிலைக் கிழித்து வெளிக் கிளம்பும் உதயகால  சூரியனைப் போல வெளிப்பட்டே தீரும்.
இவ்வாறு அவர் கூறினார்.