Published:Updated:

லோக்பால் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

லோக்பால் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
லோக்பால் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
லோக்பால் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி:லோக்பால் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

லோக்பால் மசோதா கடந்த டிசம்பர் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் மசோதா நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, லோக்பால் மசோதாவில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு அந்த வரைவு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பது பற்றி அந்தந்த மாநில

##~~##
அரசுகளே முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. லோக் பாலுக்கு உதவ, விசாரணை மேற்கொள்ளும் சி.பி.ஐ அதிகாரிகளை லோக்பால் அனுமதியின்றி இடமாற்றம் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அதில் உள்ளன.
இந்நிலையில் திருத்தப்பட்ட லோக்பால் மசோதா தொடர்பாக இன்று மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்படும், மாநிலங்களைவில் நிறைவேறியபிறகு, திருத்தங்களுடன்கூடிய மசோதா மீண்டும் மக்களவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
இதனிடையே திருத்தப்பட்ட லோக்பால் மசோதா திருப்திகரமாக இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.