Published:Updated:

திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!

திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!
திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!
திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!

நகரி: இலங்கை அதிபர் ராஜபக்சே  வருகிற 8 ஆம் தேதியன்று திருப்பதி வருகிறார்.

இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏற்கனவே 2 முறை வந்து தரிசனம் செய்து உள்ளார்.தற்போது 3 ஆவது முறையாக ராஜபக்சே வருகிற 8 ஆம் தேதி திருப்பதி வருகிறார்.

##~~##
கொழும்பில் இருந்து தனி விமானம் மூலம் முதலில் பீகார் வரும் அவர், அங்கு புத்த கயாவில் வழிபாடு நடத்தி விட்டு, அதே விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேணி குண்டா வருகிறார். பின்னர் கார் மூலம் திருமலை செல்கிறார். அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு கொழும்பு திரும்புகிறார்.
இந்நிலையில், ராஜபக்சே வருகையையொட்டி திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திருமலை வந்து தேவஸ்தான மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு ஏற்கனவே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.