Published:Updated:

ராஜபக்சே வருகையைக் கண்டித்து பிரதமர் இல்லம் முற்றுகை: வைகோ அறிவிப்பு

ராஜபக்சே வருகையைக் கண்டித்து பிரதமர் இல்லம் முற்றுகை: வைகோ அறிவிப்பு
ராஜபக்சே வருகையைக் கண்டித்து பிரதமர் இல்லம் முற்றுகை: வைகோ அறிவிப்பு
ராஜபக்சே வருகையைக் கண்டித்து பிரதமர் இல்லம் முற்றுகை: வைகோ அறிவிப்பு

சென்னை: ராஜபக்சே இந்திய வருகையைக் கண்டித்து பிப்ரவரி 8 ஆம் தேதி பிரதமர் இல்லம் முற்றுகையிடப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"உலக வரலாற்றில் கொடிய இனவெறித் தாக்குதல்களால் நடத்தப்பட்ட மனிதப் பேரழிவுகளுள் ஒன்றுதான், இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத,ராஜபக்சே அரசு நடத்திய ஈழத்தமிழ் இனப்படுகொலை ஆகும்.நெஞ்சைப் பிளக்கும் ஈழத்தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம், இப்பொழுதுதான் மெல்ல மெல்ல உலகத்தின் மனசாட்சியைத் தட்டத் தொடங்கி இருக்கின்றது.

ஆனால்,நீதியின் வெளிச்சம் ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்துவிடாமல் தடுக்க இந்திய அரசு வேலையைத் தற்போது தீவிரப்படுத்தி இருக்கின்றது. இத்தனைக் கொடுமைகளையும் ஏவி உள்ள ராஜபக்சேவை திரும்பத்திரும்ப இந்தியாவுக்கு வரவழைத்து,அவனுக்கு இந்தியாவில் எதிர்ப்பே கிடையாது என்று உலகுக்குச் சொல்ல முயற்சிக்கிறது. அந்த வகையில், பீகாரில் உள்ள புத்த கயாவுக்கு ராஜபக்சே வருவதற்கான ஏற்பாட்டைச் செய்து இருக்கின்றது.

##~~##
பிப்ரவரி 8 ஆம் தேதி, புத்த கயாவுக்கு ராஜபக்சே வரப்போவதாகவும்,பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமாரைச் சந்திக்கப் போவதாகவும்,இலங்கை அரசின் தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்து உள்ளார்.ராஜபக்சே, புத்த கயாவுக்கு வர அனுமதிக்காதீர் என்று பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமாருக்குக் கடிதம் எழுதி உள்ளேன்.
செப்டெம்பர் 21-ம் நாள் அன்று, மத்தியப் பிரதேசத்தில் நடத்திய அறப்போரின்போது, இனிமேல் இந்தியாவின் எந்தப் பகுதிக்கு ராஜபக்சே வந்தாலும், டெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தை, ம.தி.மு.க. முற்றுகையிடும் அறப்போராட்டத்தை நடத்தும் என்று அறிவித்தேன்.
எனவே, ராஜபக்சே இந்தியாவுக்குள் வருவதை எதிர்த்து, பிப்ரவரி 8-ம் நாள் அன்று, இந்திய அரசை எதிர்த்து, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம், எனது தலைமையில் நடைபெறும்" என்று கூறியுள்ளார்.