Published:Updated:

மத்திய அரசை வலியுறுத்தி காவிரி டெல்டாவில் பொதுக்கூட்டம் - அ.தி.மு.க அறிவிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மத்திய அரசை வலியுறுத்தி காவிரி டெல்டாவில் பொதுக்கூட்டம் - அ.தி.மு.க அறிவிப்பு!
மத்திய அரசை வலியுறுத்தி காவிரி டெல்டாவில் பொதுக்கூட்டம் - அ.தி.மு.க அறிவிப்பு!

மத்திய அரசை வலியுறுத்தி காவிரி டெல்டாவில் பொதுக்கூட்டம் - அ.தி.மு.க அறிவிப்பு!

உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை நிறைவேற்றக்கோரி மத்திய அரசை வலியுறுத்தும் விதமாகக் காவிரி டெல்டா மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும் என அ.தி.மு.க அறிவித்துள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாமல் ஸ்கீம் குறித்து விளக்கம் கேட்கும் விதமாக வழக்குக்கு மேல் வழக்காகத் தொடுத்து கால விரயம் செய்துவருகிறது மத்திய அரசு. எனினும் மே 12-ம் தேதிக்குள் காவிரி திட்டம் குறித்த முழு வரையறையைத்  தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக தேர்தலுக்கு முன்னரே இந்த உத்தரவு அமல்படுத்த வேண்டியுள்ளதால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, மத்திய அரசைக் கண்டித்தது தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. எதிர்க்கட்சிகள், தமிழ் அமைப்புக்கள் எனப் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. 

இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே நிறைவேற்ற  வலியுறுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிட வேண்டியுள்ளதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக நிறைவேற்றக் கோரி மத்திய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. நாகப்பட்டினத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், திருவாரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பங்கேற்கவுள்ளதாக அ.தி.மு.க தலைமை தெரிவித்துள்ளது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு