Published:Updated:

''எங்கள் மாநிலத்தில் குடியேறுங்கள்"; கமலுக்கு கர்நாடக அரசு அழைப்பு!

''எங்கள் மாநிலத்தில் குடியேறுங்கள்"; கமலுக்கு கர்நாடக அரசு அழைப்பு!
''எங்கள் மாநிலத்தில் குடியேறுங்கள்"; கமலுக்கு கர்நாடக அரசு அழைப்பு!
''எங்கள் மாநிலத்தில் குடியேறுங்கள்"; கமலுக்கு கர்நாடக அரசு அழைப்பு!

பெங்களூரூ: கர்நாடக மாநிலத்தில் குடியேறுங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எங்கள் அரசு செய்து தரும் என்று, கமலுக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்து இருக்கிறது.

கமலஹாசன் தயாரித்து நடித்து இருக்கும் 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு, தமிழகத்தில் உள்ள சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், அந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிட தமிழக அரசு தடை விதித்து இருக்கிறது.

இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. மற்றொரு பக்கம் இஸ்லாமிய அமைப்புகள், கமல் மற்றும் தமிழக உள்துறை முதன்மைச் செயலாளார் ஆகியோருக்கு இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை இப்போது, நடந்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்த கமல், '' எனது சொத்துக்களை அடகு வைத்து ரூ.90 கோடி முதலீட்டில் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறேன். இது வெளிவரா விட்டால் எனது வீடு உள்ளிட்ட சொத்துக்களை இழக்க நேரிடும் என்றும்,  தமிழ்நாடடில் இருந்து வெளியேறி மதச்சார்பற்ற மாநிலத்தில் குடியேறுவேன் என்றும், அப்படி ஒரு மாநிலம் இந்தியாவில் இல்லை என்றால் மதச்சார்பு இல்லாத நாட்டுக்குப் போய் விடுவேன் என்றும் கூறி இருந்தார்.

கமலுடைய இந்த அறிவிப்பு தொடர்பாக, நிருபர்களிடம் நேற்று பேசிய  கர்நாடக மாநில துணை முதல்வர் ஆர்.அசோக், ''எங்கள் மாநிலத்தில் குடியேறுங்கள்" என்று, கமலுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். மேலும் அவர், ''  விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்து இருப்பது ஏற்புடையது அல்ல. மன வேதனையில்தான் கமல்  நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறியுள்ளார். அவர் எங்கும் செல்ல வேண்டாம். கர்நாடகாவில் குடியேற அவருக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து தர எங்கள் அரசு தயாராக இருக்கிறது" என்றார்.