Published:Updated:

`தமிழகத்துக்குள் வாக்கு கேட்டு வர முடியாது!’ - மோடிக்கு எதிராகக் கொந்தளித்த தினகரன் # CauveryIssue

`தமிழகத்துக்குள் வாக்கு கேட்டு வர முடியாது!’ - மோடிக்கு எதிராகக் கொந்தளித்த தினகரன் # CauveryIssue
`தமிழகத்துக்குள் வாக்கு கேட்டு வர முடியாது!’ - மோடிக்கு எதிராகக் கொந்தளித்த தினகரன் # CauveryIssue

`தமிழகத்துக்குள் வாக்கு கேட்டு வர முடியாது!’ - மோடிக்கு எதிராகக் கொந்தளித்த தினகரன் # CauveryIssue

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கடந்த 7-ம் தேதி தர்மபுரியில் பிரச்சாரப் பயணம் துவங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சேலம், கரூர், நாமக்கல் வழியாக இன்று திருச்சி வந்து சேர்ந்தார். மதியம் திருச்சி வந்த தினகரன், திருச்சி சங்கம் ஹோட்டலில் மாலைவரை ஓய்வெடுத்தார். மாலை 6மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

அக்கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் சாருபாலா தொண்டைமான், மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன், நடிகை சி.ஆர்.சரஸ்வதி, மண்டலபொறுப்பாளர் தஞ்சாவூர் எம்.எல்.ஏ ரெங்கசாமி எனப் பலரும் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் பேசிய தினகரன், "கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் 8 கோடி தமிழ் மக்களை வஞ்சித்து வருகிறது.காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மோடி தமிழகத்திற்குள் வாக்கு கேட்டு வர முடியாது. அடுத்து நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்தே, கர்நாடகத்திற்கு ஆதரவாக மோடி அரசு செயல்படுகிறதோ என்கிற அச்சம் உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த அ.தி.மு.க.வுக்கு தைரியமில்லை. ஆனால் அவர்கள் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அதிலும் மத்திய அரசைக் கண்டித்தோ, அல்லது எதிர் என்கிற வார்த்தைகள் இல்லை. இதற்காகப் பல நாட்கள் யோசித்துள்ளார்கள். மக்கள் இதைத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்கள். விரைவில் கேடுகெட்ட ஆட்சியாளர்களை அப்புறப்படுத்துவார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து காவிரிக்காகப் போராட்டம் நடத்தி வருகிறது. சோழ மண்டலத்தில் முதல் முதலாக மத்திய அரசை எதிர்த்து மார்ச் 25-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சராக இருந்த போது தமிழக மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை எல்லாம் எதிர்த்து வந்தார்.

அவரை போலவே நாமும் தமிழக மக்கள் நலனிற்கு எதிரான திட்டங்களை எதிர்த்துத் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழகத்தில் இன்னொரு சுதந்திர போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கும் நாங்கள் தயாராக தான் இருக்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராடுவோம்.

ஏப்ரல் 3-ந்தேதி திருச்சியில் விவசாயிகளுடன் சேர்ந்து நடத்திய போராட்டத்துக்காக என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

எனது 24 வயதிலேர்ந்து நீதிமன்றங்களில் வழக்குகளைச் சந்தித்து வருகிறேன். எங்களுக்கு வழக்குகள் புதியதல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திகார் சிறையிலேயே இருந்தவன். அதன் காரணம் உங்களுக்கெல்லாம் தெரியும். நான் ஆர்.கே.நகருக்குச் செல்லவில்லை என்கிற கேள்வியை முன்வைக்கிறார்கள். உண்மையில் நான் எனது வீட்டுக்குச் சென்று 40நாட்கள் ஆகிறது. அந்தளவுக்கு மக்களுக்கான போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். இதையெல்லாம் ஆர்.கே.நகர் மக்கள் கவனித்து வருகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களை விட அதிகமான போராட்டங்களை நாம்தான் நடத்தியுள்ளோம்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னைக் கோமாளி என்று பேசியதாக என்மீது ஒரு வழக்கு பழனிச்சாமி போட்டிருக்கிறார். நான் போகும் இடங்களில் எல்லாம் எங்கள் மீது வழக்கு போடுகிறார்கள்.

அம்மா என்றால் கம்பீரம். அவரது சிலையை அமைக்கச் சொன்னால்  `பழனிச்சாமி பாட்டியா, பன்னீர்செல்வம் பாட்டியா’ என்று யார் சிலையையோ அமைத்திருக்கிறார்கள் என்று பேசினேன். நான் மட்டுமல்ல, வாட்ஸ் ஆப்-களில் எத்தனையோ இளைஞர்கள் விமர்சித்துப் போட்டனர். அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் பிரச்னை வரும் என்று மக்கள் பிரதிநிதியான என் மீது போடுகிறார்கள். வழக்குகளைச் சந்திப்போம். அம்மாவிற்காகவே வழக்குகளைச் சந்தித்தவன் நான். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனேயே அமைக்கக் கோரி மாவட்டம் தோறும் போராட்டத்தை நடத்தி வருகிறோம். எங்கள்போராட்டத்தில் தொண்டர்களும் இளைஞர்களும் லட்சக்கணக்கில் திரளுவதைக் கண்டு பலரும் அஞ்சுகிறார்கள். நீதிமன்றத்தில் ஆணைப் பெற்றே போராட்டங்களை நடத்த வேண்டிய சூழல். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும். எதற்கும் அஞ்ச மாட்டோம்”என்று முடித்தார்.

முன்னதாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன்,

“தமிழகத்தில் ஆளுநரும் சரியில்லை. அரசாங்கமும் சரியில்லை. தேர்தல் வந்தால் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள். ஆளுநரால் பதவிக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அவரே திரும்ப செல்ல வேண்டும். ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றவர், அமைச்சர் ஜெயக்குமார் யார்?அவர் எந்த மாதிரியான மனிதர் என்பது விரைவில் வெளிவரும். என்னுடைய ஸ்லீப்பர் செல்கள் யார் என்பது சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியவரும்.” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு