Published:Updated:

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: மதிமுக பொதுக்குழு தீர்மானம் !

 தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: மதிமுக பொதுக்குழு தீர்மானம் !
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: மதிமுக பொதுக்குழு தீர்மானம் !
 தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: மதிமுக பொதுக்குழு தீர்மானம் !

சென்னை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், சுதந்திர தமிழீழம்  குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட  17 தீர்மானங்கள் இன்று  நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டன.

மதிமுக பொதுக்குழு கூட்டம்,சென்னை அண்ணாநகர் விஜயஸ்ரீ மஹாலில்  அக்கட்சியின்  பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் இன்று காலை 10 மணிக்கு    தொடங்கியது.
 
அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார்.துணை பொதுச்செயலாளர்கள்  மல்லை சத்யா, நாசேதுரை, பொருளாளர் மாசிலாமணி மற்றும் மாநில நிர்வாகிகள்,    அப்துல்லா பெரியார்தாசன், வழக்கறிஞர் தேவதாஸ், மலர்மன்னன், உயர்நிலைக்குழு    உறுப்பினர்கள், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட    நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.
 
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த வியூகம், காவிரி  டெல்டா பகுதி விவசாயிகள் பிரச்னை, கால்நடைகளுக்கு கூட  தண்ணீர் கிடைக்காமல்  விவசாயிகள் படும் வேதனை, முல்லை பெரியாறு அணை பிரச்னை, கூடங்குளம்  அணுமின்நிலைய பிரச்னை, விலைவாசி உயர்வு, இலங்கை

##~~##
அதிபர்  ராஜபக்சே இந்தியா  வருகையின்போது எதிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பற்றி விரிவாக  விவாதிக்கப்பட்டது.
கூட்ட முடிவில்,"  ‘முன்னேறிச் செல்; அதிகாரத்தைக் கைப்பற்று’ என்று, கரூர் மாநாட்டில்  செய்யப்பட்ட பிரகடன இலக்கை அடையும் குறிக்கோளுடன் மக்களைச் சந்திக்கின்ற  வகையில், ‘முன்னேறிச் செல்’ எனும் பிரச்சாரப் பயணத்தை, வைகோ தலைமையில்  நடத்துவது. இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களும், உலகெங்கிலும் உள்ள புலம் பெயர்  ஈழத் தமிழர்களும் வாக்கு அளிக்கும் விதத்தில், சுதந்திரத் தமிழர் ஈழத்துக்கான பொது  வாக்கெடுப்பு நடத்துவதற்கு உரிய ஆதரவை, இந்தியத் துணைக் கண்டத்தில் வாழுகின்ற  பல்வேறு தேசிய இன மக்களிடமும், உலக நாடுகளிலும் உருவாக்கும் பணியை  முன்னெடுத்துச் செல்வது.
தமிழ் நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிப்பதற்கு உரிய  நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்குச் சிறப்பு  ஒதுக்கீடாக, வறட்சி நிவாரண நிதி அளிக்க மத்திய அரசு, முன்வர வேண்டும்.
அனைத்து விவசாயிகளுக்கும், ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பு ஈட்டுத் தொகை வழங்க  வேண்டும். காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, மத்திய  அரசு உடனடியாக காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசு இதழில் வெளியிட  வேண்டும். தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறையைப் போக்கிட தீவிர நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும்.
டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை நிர்ணயம் கட்டுப்பாட்டுக்குக் கண்டனம்  தெரிவிப்பதோடு டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை, எண்ணெய்  நிறுவனங்களிடம் அளிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறது.
சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ள மத்திய அரசுக்குக்  கண்டனம் தெரிவிப்பது. கலாச்சாரச் சீரழிவு, பெண்கள் மீதான பாலியல்  வன்கொடுமைகள், கொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றுக்குக் காரணமாக  இருக்கும் மதுக்கடைகளை மூடுவதற்கும், முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த மக்கள்  ஆதரவைத் திரட்டவும், வைகோ அறிவித்து உள்ளபடி பிப்ரவரி 18 முதல் 28-ஆம் தேதி  வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருபோரூர் ஒன்றியம் கோவளத்தில் தொடங்கி  மறைமலை நகர் வரையிலும்,
ஏப்ரல் 16 முதல் 29-ம்தேதி வரை பொள்ளாச்சியில் தொடங்கி ஈரோடு வரையிலும்,  மூன்றாவது கட்டமாக ஜூன் மாத இறுதியில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்  மாவட்டத்திலும் மக்களைச் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைப்பயணங்களை  வெற்றிகரமாக நடத்துவது. உங்கள் பணம் உங்கள் கையில் என்ற மோசடித் திட்டத்தைக்  கைவிட வேண்டும்.
கூடங்குளம் அணு உலையை அகற்றக்கோரியும், அணு சக்தி எதிர்ப்பு மக்கள்  இயக்கத்துக்கு முழுமையான ஆதரவு கொடுப்பது என்றும் பொதுக்குழு தீர்மானிக்கிறது.  ஈழத் தமிழர்களை விடுவித்து, தங்கள் குடும்பத்துடன் திறந்தவெளி முகாம்களில்  வாழ்ந்திட அனுமதிக்க வேண்டும். சிறப்பு முகாம்களை மூட வேண்டும். அணைகள்  பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்பது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.