Published:Updated:

சீன பிரதமரை, மோடி விரைவில் சந்திப்பார்..! சுஸ்மா சுவராஜ் அறிவிப்பு

கார்த்திக் துரைமகாராஜன்.சி
சீன பிரதமரை, மோடி விரைவில் சந்திப்பார்..! சுஸ்மா சுவராஜ் அறிவிப்பு
சீன பிரதமரை, மோடி விரைவில் சந்திப்பார்..! சுஸ்மா சுவராஜ் அறிவிப்பு

இந்தியாவுடனான எல்லைப்பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீனா சென்றார். ஷங்காய் நகரில் கடந்த 13-ம் தேதி சீன அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளை அவர் சந்தித்து எல்லைப் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

சீன பிரதமரை, மோடி விரைவில் சந்திப்பார்..! சுஸ்மா சுவராஜ் அறிவிப்பு

இந்நிலையில், சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டம் வரும் 24-ம் தேதி ஷங்காய் நகரில் நடைபெறுகிறது. ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று ஷங்காய் நகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி-யை இன்று சந்தித்த சுஷ்மா, தோக்லாம் எல்லைப் பிரச்னை உள்பட இந்தியா - சீனா இடையிலான பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சுஷ்மாவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இருநாடுகளுக்கு இடையிலான உயர்மட்டத் தலைவர்கள் மத்திய சீனாவில் உள்ள வுஹான் நகரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வரும் 27, 28 தேதிகளில் நடைபெறும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்-கை சந்தித்து சர்வதேசப் பிரச்னைகள் மற்றும் இந்தியா-சீனா இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.