Published:Updated:

செயல்தலைவருக்கு இது தெரியாதா? - ஸ்டாலினை கலாய்த்த ராமதாஸ்

மலையரசு
செயல்தலைவருக்கு இது தெரியாதா? - ஸ்டாலினை கலாய்த்த ராமதாஸ்
செயல்தலைவருக்கு இது தெரியாதா? - ஸ்டாலினை கலாய்த்த ராமதாஸ்

தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினை கலாய்க்கும் விதமாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். 

சென்னை பெரம்பூரில் நேற்று கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது திருமண விழாவில் பேசிய ஸ்டாலின்,  ``விரைவில் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமையும். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றுவோம். அதன்பிறகு, இப்போது கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் அமைச்சர்களை விசாரிப்போம். பின்னர் 100-க்கு 90 சதவிகித அமைச்சர்கள் வெளியில் இருக்க மாட்டார்கள், சிறையில்தான் இருப்பார்கள்" என்றார். 

இந்நிலையில், ஸ்டாலினின் இந்தப் பேச்சை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கிண்டல் அடித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது,  ``அய்யோ பாவம்... பதவியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும்தான் லோக் ஆயுக்தா என்பது செயல் தலைவருக்குத் தெரியாதோ?" எனப் பதிவிட்டுள்ளார். அதற்கு ஆதாரமாக, கர்நாடகாவில் அமல்படுத்தப்பட்ட லோக் ஆயுக்தா அறிக்கை ஒன்றையும் அவர் இணைத்துள்ளார்.