Published:Updated:

கூட்டுறவு சங்கத் தேர்தல்...! தேர்தல் அலுவலரை சிறைப்பிடித்த மக்கள்

இ.கார்த்திகேயன்
கூட்டுறவு சங்கத் தேர்தல்...! தேர்தல் அலுவலரை சிறைப்பிடித்த மக்கள்
கூட்டுறவு சங்கத் தேர்தல்...! தேர்தல் அலுவலரை சிறைப்பிடித்த மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள வரதம்பட்டி கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத்தில் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட மறுத்த தேர்தல் அலுவலரை மக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

கூட்டுறவு சங்கத் தேர்தல்...! தேர்தல் அலுவலரை சிறைப்பிடித்த மக்கள்

கோவில்பட்டி அருகே உள்ள வரதம்பட்டியில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்க உறுப்பினர்கள் மற்றும் தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேட்புமனு பெறப்பட்டது. 

இதற்கிடையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்த தடை விதித்திருந்தது. இந்நிலையில், அரசு மேல்முறையீட்டு மனு செய்து தேர்தல் நடத்துவதற்கு ஆணை வாங்கியது. இதைத் தொடர்ந்து மீண்டும் தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன.  

கூட்டுறவு சங்கத் தேர்தல்...! தேர்தல் அலுவலரை சிறைப்பிடித்த மக்கள்

அதன்படி, வரதம்பட்டி கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் வேட்புமனு பரீசிலனை நடைபெற்றது. ஆனால், தேர்தல் அலுவலர் முருகன், இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட மறுத்தாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், தேர்தல் அலுவலரை அலுவலகத்தை விட்டு வெளிவரவிடமால், சங்கத்தின் வாசலைப் பூட்டி சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

இந்தத் தகவல் கிடைத்தும் வரதம்பட்டி கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்துக்கு நாலாட்டின்புதூர் போலீஸார் விரைந்து சென்று மக்கள் மற்றும் தேர்தல் அலுவலர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் இறுதி வேட்பாளர் பட்டியல் அலுவலகத்தில் ஒட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். தேர்தல் அலுவலரை போலீஸார் பாத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.