Published:Updated:

பிரதமர் மோடிக்குக் கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கைதி கோவையில் கைது!

குருபிரசாத்

“மோடியை கொலை பண்ண முடிவு பண்ணிருக்கோம்” என்று பரவிய வாட்ஸ் அப் உரையாடலை வைத்து, கோவையைச் சேர்ந்த ரபீக் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பிரதமர் மோடிக்குக் கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கைதி கோவையில் கைது!
பிரதமர் மோடிக்குக் கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கைதி கோவையில் கைது!

பிரதமர் மோடிக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக கோவையைச் சேர்ந்த முன்னாள் கைதியைப் போலீஸார் கைது செய்துள்ளனர். 

பிரதமர் மோடி, முன்னாள் அமைச்சர் அத்வானி ஆகியோருக்குக் கொலை மிரட்டல் விடுப்பது போன்ற வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று கோவையில் கடந்த சில நாள்களாக வைரலானது. அந்த ஆடியோவில் குண்டுவெடிப்பு, தடா உள்ளிட்ட வழக்குகளைச் சந்தித்ததாக குறிப்பிட்ட நபர் பேசுவதாகவும் இருந்தது. இந்த ஆடியோ குறித்து தனிப்படை அமைத்து கோவை போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், அந்த ஆடியோவில் பேசியிருந்தது கோவை, கரும்புக் கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்த ரபீக் என்கிற அப்துல் ரபீக் (53) என்பது விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து, ரபீக்கைக் கைது செய்த குனியமுத்தூர் போலீஸார், காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, விடுதலையான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் அவர் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர். அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், விரைவில், கோவை நீதிமன்ற நீதிபதி ராஜவேல் முன்பு அவரை ஆஜர்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.