Published:Updated:

பிரதமர் வீடு முற்றுகை: மதிமுகவினர் டெல்லி பயணம் !

பிரதமர் வீடு முற்றுகை: மதிமுகவினர் டெல்லி பயணம் !
பிரதமர் வீடு முற்றுகை: மதிமுகவினர் டெல்லி பயணம் !
பிரதமர் வீடு முற்றுகை: மதிமுகவினர் டெல்லி பயணம் !

புதுடெல்லி: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து  பிரதமரின் இல்லத்தின் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக, மதிமுகவினர்  இன்று ரயில் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

வரும் 8 ஆம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே பீகார் மாநிலத்தில் உள்ள புத்தர்  நினைவிடமான புத்த கயாவிற்கும், திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கும் தரிசனம்  செய்வதற்கு வருகிறார்,  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள்  போராட்டம், பேரணி அறிவித்திருக்கும் நிலையில் மதிமுக கட்சி தலைவர் வைகோ  டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்திலும்,  திருப்பதியிலும் முற்றுகை போராட்டம்  அறிவித்திருக்கிறார்.

இதில் மதிமுக, பெரியார் திராவிட கழகம்,  தமிழர் விடுதலை இயக்கம்,  மே 17 இயக்கம்,   தமிழ் தேசிய இயக்கம்  கட்சிகளை சேர்ந்த  1, 500 தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்,  அதன் முதல் கட்டமாக,  மதிமுக சீருடை

##~~##
அணிந்த 200 தொண்டர்கள் இன்று காலை  9.15 மணிக்கு மதிமுக கட்சி தலைவர் வைகோ மற்றும் பழ. நெடுமாறன் பூங்கொத்து  கொடுத்து வழியனுப்ப சென்னை எழும்பூரில் இருந்து ரயிலில் கிளம்பினர்.
வரும் 8 ஆம் தேதி கொழும்பில் இருந்து பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவிற்கு வரும்  ராஜபக்சே, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வந்து  பின்னர் காரில் திருப்பதிக்கு செல்கிறார். திருப்பதியில் முற்றுகையிடுவோரை கைது  செய்ய ஆந்திர போலீஸ் உத்தரவிட்டிருக்கிறது.
ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் உள்ள பல்கலைகழக திறப்பு விழாவிற்கு வந்த  ராஜபக்சேவை எதிர்த்து வைகோ தலைமையிலான மதிமுகவினர் மத்திய பிரதேச  எல்லைக்கே சென்று போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.