Published:Updated:

ஸ்டெர்லைட்டை தடை செய்யக்கோரி வைகோ வழக்கு! மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

ஸ்டெர்லைட்டை தடை செய்யக்கோரி வைகோ வழக்கு! மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
ஸ்டெர்லைட்டை தடை செய்யக்கோரி வைகோ வழக்கு! மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

ஸ்டெர்லைட்டை தடை செய்யக்கோரி வைகோ வழக்கு! மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்குவதற்கும், புதிய தொழிற்சாலை விரிவாக்கத்திற்கும் தடை விதிக்கக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க, மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்  தாக்கல் செய்துள்ள மனுவில், ''தூத்துக்குடி  மீளவிட்டான் பகுதியில், தற்போது உள்ள ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று, கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையிலிருந்து வெளியான கழிவுகளால் இப்பகுதியில் காற்று, நீர் கடுமையாக மாசு அடைந்துள்ளது. இதனால், இப்பகுதியில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள கிராம மக்கள், மாணவர்கள், குழந்தைகள், பெண்கள்  பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் தனது தொழிற்சாலையை விரிவாக்கம்செய்யும் பணிகளை மேற்கொண்டுவருகிறது.

இதற்கு, மத்திய  மாநில அரசுகளிடமிருந்து உரிய அனுமதி பெறவில்லை. தற்போது, தொழிற்சாலையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். எனவே, தற்போது உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலை  இயங்குவதற்கும், புதிய தொழிற்சாலை விரிவாக்கத்திற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் செல்வம் , பசீர் அகமது அமர்வு முன் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையின் முதல் யூனிட் செயல்படவில்லை எனவும்  இரண்டாவது யூனிட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பதில் அளிக்க, மத்திய மாநில சுற்றுச்சூழல் அமைச்சகம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு