Published:Updated:

‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’ - உயர் நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்

''ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை'' என அம்ருதா தொடர்ந்த வழக்கில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

‘ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எங்களிடம் இல்லை’ - உயர் நீதிமன்றத்தில் அப்போலோ அதிர்ச்சி பதில்

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், 'கடந்த 14.8.1980 அன்று நான் ஜெயலலிதாவுக்கு மகளாகப் பிறந்தேன். மூன்று மாத குழந்தையாக இருந்தபோதே ஜெயலலிதாவின் சகோதரியான சைலஜாவுக்கு தத்துக் கொடுக்கப்பட்டேன். தற்போதுதான் நான் ஜெயலலிதாவின் மகள் என்பது உறவினர்கள் மூலமாக எனக்குத் தெரியவந்தது. ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து எங்கள் குலவழக்கப்படி சம்பிரதாய சடங்குகளைச் செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அவரின் சகோதரி தீபா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை ஏற்றுக்கொள்ளக் கூடாது என தீபா மற்றும் தீபக் தரப்பும், இது ஆர்.கே நகர் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என அரசு தரப்பும் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தன.

இதையடுத்து, இந்த வழக்கில் அப்போலோ நிர்வாகத்திடம் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதுகுறித்து பதிலளிக்கக் கால அவகாசம் வேண்டும் என அப்போலோ தரப்பில் கேட்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் ஏப்ரல் 26-ம் தேதி (இன்று) அப்போலோ நிர்வாகம் ரத்த மாதிரிகள் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனக் கூறி, இந்த வழக்கை ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

இந்நிலையில், அப்போலோ நிர்வாகம் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை'' என தெரிவித்துள்ளது. அப்போலோவின் இந்தப் பதில் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு