Published:Updated:

திமுகவுக்கு கோமா... தேமுதிக இனி இருக்குமா?

திமுகவுக்கு கோமா... தேமுதிக இனி இருக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
திமுகவுக்கு கோமா... தேமுதிக இனி இருக்குமா?

நாஞ்சில் சம்பத் நறுக்!

திமுகவுக்கு கோமா... தேமுதிக இனி இருக்குமா?

நாஞ்சில் சம்பத் நறுக்!

Published:Updated:
திமுகவுக்கு கோமா... தேமுதிக இனி இருக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
திமுகவுக்கு கோமா... தேமுதிக இனி இருக்குமா?

நாஞ்சில் சம்பத் என்றாலே அவரது `நான்ஸ்டாப்' ரகளைப் பேச்சுதான் நம் மனக்கண்ணில் வரும். ஒரு காலைப்பொழுதில் அவருடன் பேசியபோது...

‘‘அ.தி.மு.க அரசின் நூறுநாள் சாதனைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறவர் அம்மா. ஆட்சியில் அமர்ந்த முதல் நாள் அன்றே முத்தான ஐந்து திட்டங்களுக்குக் கையெழுத்திட்டு மக்களை மனம்குளிர வைத்துவிட்டார். டெல்டா விவசாயிகளுக்கு காவிரில் தண்ணீர் திறந்துவிட வைத்து தமிழகத்தின் சட்ட உரிமையை நிலைநாட்டியவர் அம்மா. ஆனால், இதெல்லாம் கருணாநிதிக்குத் தெரியாது. இந்தக் கருணாநிதி எப்படிப்பட்டவர் தெரியுமா? ஆட்சிக்கு வந்தால் 2 ஏக்கர் நிலம் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஐந்து ஆண்டு முடியும்போது, ‘நிலம் இருந்தால் தந்திருப்பேனே’ என்று அவரது வாக்குறுதியையே கொச்சைப்படுத்தியவர்.’’

திமுகவுக்கு கோமா... தேமுதிக இனி இருக்குமா?

‘‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுக்கிடக்கிறது என்று தி.மு.க சொல்கிறதே? இதற்கென்ன சொல்லப்போகிறீர்கள்?’’

‘‘காஷ்மீர் எரிகிறது. உத்திரபிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் என்று வடக்கே பெரும்பாலான மாநிலங்களும் ஒவ்வொரு பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றன. ஆனால், தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிறது. கருணாநிதியால்தான் தமிழகத்துக்கு பிரச்னை. அமைதியை சீர்குலைக்க முயலும் கருணாநிதி, ஸ்டாலின் மீதான தமிழக மக்களின் கோபம் இன்னும் குறையவில்லை.’’

‘‘சட்டமன்றத்தில், ‘அம்மா பஜனை’ சத்தம்தான் அதிகமாகக் கேட்கிறது' என்று ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரே?’’

‘‘சட்டமன்றத்துக்கு வருவதற்கு வாய்ப்பைப் பெற்றிருக்கின்ற அ.தி.மு.க உறுப்பினர்கள், அம்மாவுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். அதைக்கூட தி.மு.க-வினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சட்டமன்றத்தில் பேச வாய்ப்புத் தரவில்லை என்று கூச்சப்படாமல் பொய் சொல்கிறார்கள். விவாதங்களில் பங்கெடுக்க ஆர்வம் இல்லாமல் வெளிநடப்பு செய்து விளம்பரம் தேடிக்கொள்கிற கூட்டம். இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள். ஸ்டாலினுக்கோ அவரது கட்சியினருக்கோ கேள்வி கேட்கும் ஞானம் இல்லை. வெளிநடப்பு செய்ததற்கான காரணத்தைக்கூட துண்டுச் சீட்டைப் பார்த்துதான் ஸ்டாலின் சொல்வார். எந்தத் துறையை பற்றிய அறிவும் தி.மு.க-வினருக்கு அறவே இல்லை.’’

‘‘நமக்கு நாமே பயணத்தைக் கேலி செய்து தி.மு.க-வை டென்ஷன் ஆக்குவது சரியா?’’

‘‘ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே திட்டம் ஃப்ளாப் ஆகிவிட்டது என்று உண்மையைத்தானே சொன்னோம். அதில் என்ன தவறு இருக்கிறது. அதற்குப் பதில் சொல்ல வழியில்லாமல் சட்டமன்றத்தில் கூச்சல் குழப்பம் விளைவித்து சட்டமன்றத்தை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டதால்தான் வெளியேற்றப்பட்டார்கள்.

அதைக்கூட சுயவிளம்பரத்துக்குத்தான் ஸ்டாலின் பயன்படுத்தினார். பிரச்னையைக் கிளப்பி விட்டு, சபாநாயகர் உத்தரவுக்கு கட்டுப்படாமல் வம்பு செய்ததால்தான் அவர்களை அப்புறப்படுத்த சபாநாயகர் உத்தரவிட்டார். சபைக்குள் உட்கார்ந்து ரகளை செய்பவர்களை தூக்கித்தான் வெளியே கொண்டு வரமுடியும். ஸ்டாலினையாவது தூக்கி வெளியே கொண்டு வந்துவிடலாம். துரைமுருகன் போன்றவர்களைத் தூக்க முடியுமா? இந்தக் கூட்டத்தை வெளியே தூக்கிப் போடுவது அவ்வளவு எளிதல்லவே?’’

‘‘தி.மு.க-வினரை சட்டமன்ற வளாகத்திலுள்ள தி.மு.க அலுவலகத்துக்குள்கூட விடாமல் பூட்டுப் போட்டுவிட்டார்களே?’’

‘‘வீட்டுக்கே வரக்கூடாது என்றுதான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். அதற்குப் பிறகு கக்கூஸ்க்கு வருவோம். திண்ணையில் வந்து உட்காருவோம் என்று அடம்பிடிப்பது எப்படி சரி? தி.மு.க ஆட்சியில் மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் என்பவரை, ‘சட்டசபை விடுதிக்குக்கூட வரக்கூடாது’ என்று தி.மு.க தடை போட்டதை இப்போது வசதியாக மறந்துவிட்டார்கள். சட்டமன்றத்தில் புள்ளி விபரங்களோடு அம்மாவிடம் வாதம் செய்யமுடியாமல் திராணி இல்லாத தி.மு.க எம்.எல்.ஏக்கள் வெளியே சென்று மக்களின் மனதை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். 7 மாவட்டங்களில் இருந்து ஆட்களைக் கூட்டி வந்து மதுரையில் கூட்டம் போட்டார்கள். சபாநாயகர் ஆழகாக இல்லை என்று ஸ்டாலின் சொல்கிறார். ஸ்டாலின் அழகு அவருக்குத்தான் தெரியும்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திமுகவுக்கு கோமா... தேமுதிக இனி இருக்குமா?

‘‘தே.மு.தி.க-வில் இருந்து ஆட்கள் வருகிறார்களா என்று அ.தி.மு.க எதிர்பார்த்துக் காத்திருப்பதாக பிரேமலதா கூறியுள்ளாரே?’’

‘‘அந்தக் கட்சியில் விஜயகாந்த்தையாவது தக்க வைத்துக்கொள்ள முடியுமா? என்று பிரேமலதா கவலைப்படட்டும். தே.மு.தி.க-வை விட்டுப் போனவர்கள் யாருடைய விபரங்களாவது பிரேமலதாவுக்குத் தெரியுமா? எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தில் இருந்த கட்சி இப்போது இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டது. இந்த உள்ளாட்சித் தேர்தலோடு அந்தக் கட்சி முழுவதுமாக மூட்டை கட்டப்பட்டுவிடும்.’’

‘‘மேயர், நகராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கானவர்கள், கவுன்சிலர் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது தி.மு.க. மீதான பயம்தான் காரணமா?’’


‘‘கோமா நிலையில் இருக்கிற தி.மு.க-வைப் பார்த்து எங்களுக்கு பயமில்லை. அம்மா பெயரைச் சொன்னாலே வெற்றிதான். அம்மாவின் போர்ப்படை வீரர்களுக்கு என்றும் பயம் என்பதே கிடையாது. இந்த உள்ளாட்சி தேர்தலில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம், ஜனநாயகத்தை விசாலமாக்கி இருக்கிறோம். ஜனநாயகத்தை அழகாக்கி இருக்கிறோம். இனி, மேயர்கள், நகராட்சி தலைவர்கள் ஏதேச்சாதிகாரத்தோடு முடிவு எடுக்க முடியாது. மன்ற உறுப்பினர்களின் விருப்பத்தின்படியே உள்ளாட்சி நிர்வாகம் இயங்கும். உள்ளாட்சி நிர்வாகம் இன்னும் சிறப்பாகச் செயல்பட இந்தச் சட்டத் திருத்தம் உதவும்.’’
Nanjil Sampath


‘‘தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவரை நீக்கம் செய்து 100 நாட்கள் ஆகியும் புதிய தலைவரை டெல்லி தலைமையால் நியமிக்க முடியவில்லையே?’’


‘‘தலைவர் இருக்கும்போது அவர் சொல்லைக் கேட்டுத்தான் செயல்பட்டார்களா..? அந்தக் கட்சிக்கு தலைவரைப் போடவே முடியாது. போட்டாலும் ஒருவர் சொல்லை மற்றவர்கள் கேட்பதே கிடையாது. அங்கு இருக்கும் அனைவருமே தலைவர்கள்!’’

- எஸ்.முத்துகிருஷ்ணன்,
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்