Published:Updated:

காவிரி: தமிழகத்திற்கு 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!

புதுடெல்லி: மத்தியக் குழு அளித்த பரிந்துரையின்படி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளுக்கு தேவையான தண்ணீர் குறித்து, ஆய்வு செய்த நிபுணர் குழு உச்ச நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது. அதில் தமிழகத்தில் சம்பா சாகுபடியைக் காப்பாற்ற 2.44 டி.எம்.சி,. தண்ணீர் குறைந்தபட்ச தேவை என்றும், அதுவே உடனடியாக போதுமானது என்றும் பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்தியக் குழுவின் பரிந்துரையின்படி, தமிழகத்துக்கு உடனடியாக கர்நாடகம் காவிரியிலிருந்து 2.44 டி.எம்.சி. நீரை திறந்து விடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2.44 டி.எம்.சி. நீர்  போதுமானதல்ல என்றும், நிபுணர் குழு காவிரி பாசன பகுதியில் 10 சதவீத பரப்பளவில் மட்டுமே ஆய்வு மேற்கொண்டதாகவும், எனவே மத்திய குழுவின் பரிந்துரையை ஏற்க முடியாது என்றும்  வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து, மத்திய நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞ புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.