Published:Updated:

'தாமிரபரணியில் புதிய தடுப்பணைப் பணியை நிறுத்த வேண்டும்!’ - தி.மு.க. கோரிக்கை

'தாமிரபரணியில் புதிய தடுப்பணைப் பணியை நிறுத்த வேண்டும்!’ - தி.மு.க. கோரிக்கை
'தாமிரபரணியில் புதிய தடுப்பணைப் பணியை நிறுத்த வேண்டும்!’ - தி.மு.க. கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் பக்கவெட்டி கிராமப் பகுதியில் தடுப்பணை பயன்பாட்டிலிருந்து வரும் நிலையில் அகரம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டுவது அவசியமற்றது. அதற்குப் பதிலாக ஆதிச்சநல்லூர் ஆற்றுப் பகுதியில் தடுப்பணை கட்டுவதுதான் பலன் அளித்திடும்.” என தி.மு.க., மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் தெரிவித்துள்ளார்.

''தூத்துக்குடி மாவட்டம் பக்கவெட்டி கிராமப் பகுதியில் தடுப்பணை பயன்பாட்டிலிருந்து வரும் நிலையில் அகரம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கில் ரூ.13 கோடி  மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டுவது அவசியமற்றது. அதற்குப் பதிலாக ஆதிச்சநல்லூர் ஆற்றுப் பகுதியில் தடுப்பணை கட்டுவதுதான் பலன் அளித்திடும்.” என தி.மு.க., மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், ''தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் மூலமாக 46,107ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. விவசாயம் மற்றும் குடிநீருக்கு முக்கிய நீராதாரமான தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை தமிழ்நாடு குடிநீர் வழங்கல்-வடிகால் வாரியத்தினரும், பொதுப்பணித்துறையினரும் தொழிற்சாலைகளுக்கு முறைகேடாக விற்பனை செய்துவருவதால் தாமிரபரணி பாசனத்தில் முப்போக நெற்பயிர் சாகுபடி ஒருபோகமாக மாறிவிட்டது. மாவட்டத்தில் கோடைக்காலங்களில் குடிநீருக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

கடந்த 2011-ம் ஆண்டு வல்லநாடு அகரம் அருகேயுள்ள பக்கவெட்டி கிராமப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இந்தத் தடுப்பணை பயன்பாட்டில் இருந்துவரும் நிலையில், தற்போது வல்லநாடு அகரம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.13 கோடி திட்ட மதிப்பீட்டில் புதியதாக தடுப்பணை கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான ஒப்பந்தப் புள்ளி பெறுவதற்கான ஆயத்தப்பணிகள் அரசால் தொடங்கப்பட்டுள்ளன. 

ஏற்கெனவே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் பக்கவெட்டியில் தடுப்பணை உள்ள நிலையில் வல்லநாடு அகரம் கிராமத்தில் புதியதாக தடுப்பணை கட்டுவது தேவையில்லாதது என்று விவசாயிகள் எண்ணுகின்றனர். ஆதலால், இந்தத் தடுப்பணை கட்டும் திட்டத்தை மாற்றி அமைத்திட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் நாங்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் வலியுறுத்திள்ளோம். 'அகரம் கிராமத்தில் தடுப்பணை கட்டுவதற்குப் பதிலாக ஆதிச்சநல்லூரில் புதியதாக தடுப்பணை கட்டுவதுதான் மிகவும் பலன் அளித்திடும்' என்பதே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எண்ணமாகும்.

இந்நிலையில், விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு தேவையில்லாமல் அகரத்தில் தடுப்பணை கட்டுவதற்கு அரசு முயற்சி செய்வது பெரும் அதிருப்தியளிக்கிறது. எனவே, அகரம் கிராமத்தில் கட்டப்படவிருக்கும் புதிய தடுப்பணை ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக ஆதிச்சநல்லூரில் தடுப்பணை கட்ட வேண்டும். அல்லது ஸ்ரீவைகுண்டம் அணைக்குக் கீழ்பகுதிகளான ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, வாழவல்லான் போன்ற ஏதாவது ஒரு பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயன் அளித்திடும் வகையில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இல்லாதபட்சத்தில் விவசாயிகள், பொதுமக்களின் நலன்கருதி அகரம் கிராமத்தில் தடுப்பணை கட்டுவதற்குத் தடை விதிக்கக்கோரி தி.மு.க இளைஞர் அணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு