Published:Updated:

கனிமொழி குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு: திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

சென்னை: கனிமொழி எம்.பி. குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கை  அருகே முற்றுகையிட்டதால் திமுக உறுப்பினர்கள் 2 ஆவது நாளாக சட்டசபையிலிருந்து  இன்று வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற கவர்னர் உரை மீதான விவாதத்தில்  கலந்துகொண்டு பேசிய அதிமுக அமைச்சர்கள், இலங்கை பிரச்னையில் திமுகவை குறை  கூறியதோடு,இலங்கை சென்ற எம்.பி.க்கள் குழுவில் திமுக எம்.பி. கனிமொழி  இடம்பெற்றது குறித்தும் விமர்சித்தனர்.

##~~##
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், இப்பேச்சை  அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டபடியே,  சபாநாயகர் இருக்கை அருகே சென்று முற்றுகையிட முயற்சித்தனர்.
இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக  அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.