Published:Updated:

சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் கைகலப்பு; வெளியேற்றம்!

சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் கைகலப்பு; வெளியேற்றம்!
சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் கைகலப்பு; வெளியேற்றம்!
சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் கைகலப்பு; வெளியேற்றம்!

சென்னை: தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு இடையே கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள்  வெளியேற்றப்பட்டனர்.

 தமிழக சட்டசபையில் விஜயகாந்த்தின் தேமுதிக கட்சிக்கு 29 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதில் 4 எம்.எல்.ஏக்கள், அதிமுக ஆதரவு நிலையை எடுத்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தமிழக  சட்டசபையில் இன்று நடந்தபோது, தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ  தமிழழகன், பேசுகையில் முதல்வரை வாழ்த்தி பேசினார்.

முதல்வரை சந்தித்த பிறகு தனது தொகுதியில் வளர்ச்சி பணிகள் நடப்பதாகவும் அதை தேமுதிக எம்.எல்.ஏக்கள் அனைவரும் தனது வழியில் பின்பற்ற வேண்டும் என்றும் பேசினார். இதற்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

##~~##
இதற்கு தேமுதிகவை சேர்ந்த மற்ற எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அப்போது, தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கும் தமிழழகனுக்கும் கடும் வக்குவாதம் ஏற்பட்டது. 

ஒருகட்டத்தில் தமிழழகனை தாக்க தேமுதிக எம்.எல். ஏ.க்கள் பாய்ந்தபோது, அதனை ராதாபுரம் தேமுதிக எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தடுக்க முயன்றார். இதனால் அவர் மீது தாக்குதல் நடைபெற்றது. இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கைகலப்பில் ஈடுபட்ட தேமுதிக உறுப்பினர்களை வெளியேற்றும்படி சபை  காவலர்களுக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.இதனையடுத்து பண்ருட்டி ராமச்சந்திரனைத் தவிர அனைத்து தேமுதிக உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டனர். தமிழழகனை தாக்கியது குறித்து உரிய முடிவு எடுக்க சபை உரிமைக் குழுவுக்கும் பேரவைத்தலைவர் அனுப்பி வைத்தார்.அவர்கள்  வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய தேமுதிக கொறாடா சந்திரகுமார் எம்.எல்.ஏ , ''தன்னை உருவாக்கிய கட்சிக்கும் தலைமைக்கும் ஓட்டு போட்ட மக்களுக்கும் துரோகம் செய்து விட்டு துரோக செயலில் 4 எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அதில் ஒரு எம்.எல்.ஏ இன்று சபையில் பேசும் போது, முதல்வரை புகழ்ந்து பேசினார். அதை நாங்கள் தடுக்கவில்லை. அது அவரது உரிமையாகக் கூட இருக்கலாம்.

அவரிடம், ஆளும்கட்சி சார்பில் அச்சடிக்கப்பட்ட, கையால் எழுதப்பட்ட காகிதத்தை கொடுத்து அதை பேரவையில் படிக்க வைத்தனர். தேமுதிக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஆளும் கட்சிக்கு வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கிறார். இதற்கு பதில் சொல்ல எங்களுக்கு அனுமதி இல்லை. தட்டிக் கேட்ட எங்கள் எம்.எல்.ஏ அனகை முருகேசனை மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் தாக்கினர். சட்டையை கிழித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.